அதிர்ச்சி : நட்சத்திர வீரருக்கு 6 மாதம் கிரிக்கெட் விளையாட தடை

வங்கதேச வீரர் சபிர் ரஹ்மான், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க 6 மாதம் தடை விதிக்கப்பட்டது.

வங்கதேச அணி வீரர் சபிர் ரஹ்மான், 26. இங்கு நடந்த தேசிய கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜ்ஷாகி அணிக்காக விளையாடினார். தாகா மெட்ரோபோலிஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, ரசிகர் ஒருவர் சபிரை விமர்சனம் செய்தார். இதை பொறுத்துக் கொள்ளாத அவர், களத்தில் நின்ற அம்பயரிடம், ‘டிரசிங் ரூம்’ செல்ல அனுமதி கேட்டார். நேராக பெவிலியன் திரும்பிய சபிர், ராட்சத ஸ்கிரீன் பின் புறம் சென்று, அந்த ரசிகரை தாக்கியுள்ளார்.

இதைப் பார்த்த ‘ரிசர்வ்’ அம்பயர், போட்டி நடுவரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்த வங்கதேச கிரிக்கெட் போர்டு, உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க, சபிருக்கு 6 மாதம் தடை விதித்தது. தவிர, ரூ. 20 லட்சம் அபராதமும் விதித்தது. இதையடுத்து, இவரது ஒப்பந்தத்தை வங்கதேச போர்டு திரும்ப பெற்றுக் கொண்டது. இருப்பினும், சர்வதேச போட்டிகளில் இவர் பங்கேற்க தடையில்லை.

2016 டி20 உலகக்கோப்பையில் இதே சபீர் ரஹ்மானை தான் தோனி அந்தரத்தில் ஸ்டம்பிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது புதிதல்ல

இவர் இதுபோன்று சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல. பல முறை இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கு நடந்த வங்கதேச பிரிமியர் லீக் தொடரில், அம்பயரிடம் மோசமாக நடந்து கொண்டு, அபராதம் செலுத்தினார். கடந்த 2016ல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக, தகாத வார்த்தைகள் பேசி, 30 சதவீத சம்பளத்தை அபராதமாக கட்டினார்.

Editor:

This website uses cookies.