சச்சின் பிறந்தநாள் அன்று கருத்துமோதலில் ஈடுபட்ட தோனி ரசிகர்கள்! இடையில் மாட்டிய கங்குலி!

ஊரடங்கு காலத்தில்தான் என் தாயாருடன் நிறைய நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 47 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியுள்ள சச்சின், பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அவரின் சாதனைகள் இப்போது வரை முறிக்கப்படாமல்தான் இருக்கிறது.

2013 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டும் சச்சினின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில், அவருக்கு உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். தெண்டுல்கரின் பிறந்தநாளுக்கு பிசிசிஐ தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோ பகிர்ந்துள்ளது.
அதற்கு, “மாஸ்டர் பிளாஸ்டர் @சச்சின்_ 47 வயதை எட்டியுள்ளார், 2008ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான அவரது புகழ்பெற்ற ஆட்டத்தில் ஒன்றை நாங்கள் புதுப்பிக்கிறோம். தன்னுடைய 41 டெஸ்ட் சதங்களை, 26/11 மும்பை தீவிரவாத தக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பித்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முதல் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்தார். “பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்மேன். விளையாட்டில் நீங்கள் விட்டுச்சென்ற மரபு அழியாது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்,” என்று டுவிட் செய்துள்ளார்.

 

இப்படி ஒரு பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் தோனி ரசிகர்கள், கங்குலி ரசிகர்கள் மற்றும் சச்சின் ரசிகர்களுக்கிடையே சமூகவலைதளத்தில் பெரும் பிரச்சனையை சென்றுகொண்டிருக்கிறது. இதில் மூவரில் யார் மிகச்சிறந்த வீரர் என கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது. ஆரோக்கியமான கருத்து மோதல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் கேலியும் கிண்டலுமாக சக புரிந்துணர்வுடன் மாற்றி மாற்றி சிலாகிப்புடன் கலாய்த்துக்கொள்கின்றனர். அதன் சில துணுக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Sathish Kumar:

This website uses cookies.