குழந்தையின் விளையாட்டு பார்த்து ரசித்து வாழ்த்திய சச்சின்

2 வயதே ஆன குழந்தை சிறப்பாக ஆடியதை பார்த்து மகிழ்ந்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார் சச்சின் டெண்டுல்கர்.

சிறந்த கிரிக்கெட் வீரர்களாக நாட்டிற்காக விளையாட விரும்பும் நம் நாட்டில் பல குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், ஒவ்வொரு குழந்தையும் சச்சின் டெண்டுல்கர் மாதிரி வர கனவு காண்கிறார்கள்.

இந்த நிலையில்,  மோஷின் என்ற நபர் தனது தம்பியின் 2 வயது மகன் ஆடிய கிரிக்கெட்டை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் நன்றாக விளையாடுகிறாரா? என்று விராட் கோலி, சச்சின் தெண்டுல்கல், தோணி ஆகியோரை குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விடியோவை பார்த்து மகிழ்ந்த சச்சின் டெண்டுல்கர், ஓரிரு வரிகளில் அறிவுரை கூறி வாழ்த்து தெரிவித்தார்.
சச்சின் தெண்டுல்கர் அந்த வீடியோவை குறிப்பிட்டு கூறியதாவது , “நவீன காலத்தின் சிறந்த விளையாட்டு வீரர். சிறந்த தொடக்கம் ஆஷீம், தொடர்ந்து விளையாடுங்கள். சந்தோஷமாக விளையாடுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு” என பதிவிட்டுள்ளார்.

Vignesh G:

This website uses cookies.