இந்தியாவில் தற்போது இங்கிலாந்து – இந்தியா இடையிலான சுற்றுப்பயணத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, மறுபுறம் முன்னாள் வீரர்கள் கலந்துகொள்ளும் 2021 சாலை பாதுகாப்பு உலகத் தொடர் மார்ச் 5 முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச அணிகளின் முன்னாள் ஜாம்பவான்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதில் சச்சின், விரேந்திர சேவாக், ஜாகீர் கான், யுவராஜ் சிங், பிரெட் லீ, பிரைன் லாரா, கெவின் பீட்டசன் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் அவர்களது அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்திய லெஜெண்ட்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதி போட்டிக்கு முதல் அணியாக தேர்வாகியுள்ளது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதி போடாடிக்கு தேர்வாகியுள்ளது. எனவே, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் இலங்கை லெஜெண்ட்ஸ் அணிகள் இறுதி போட்டியில் களமிறங்கவுள்ளது.
இந்நிலையில், இந்தியா லெஜெண்ட்ஸ் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் வீரர்களை எப்படி தேர்வு செய்வது என்பதை பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசுகையில் “நீண்ட காலத்திற்கு பிறகு விளையாடுவதால் பல்வேறு உடல் தொல்லைகள் ஏற்படுகிறது. எனக்கு பயிற்சி ஆட்டத்தின் போது முதுகில் காயம் ஏற்பட்டது.
இருந்துலும் இந்த தொடர் சிறப்பான நோக்கத்துடன் நடத்தப்படுவதால் நான் தொடர்ந்து விளையாடுகிறேன். இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்யும் போது இளைஞர்களை மட்டுமே எடுப்பது தப்பு. திறமை இருக்கும் வீரர்களையும் எடுக்க வேண்டும். வீரர்களிடம் வயதை பார்க்காமல் திறமையை மட்டுமே பார்க்க வேண்டும் என்று வலுயிறுத்தி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். இவரது இந்த கருத்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.