புதிய சரித்திரம் படைத்த விராட் கோஹ்லிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து !!

புதிய சரித்திரம் படைத்த விராட் கோஹ்லிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

ஒரே ஆண்டில் மூன்று ஐ.சி.சி., விருதுகள் வென்று சரித்திர சாதனை படைத்திருக்கும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ‘ரன் மிஷின்’ என்ற புனைப்பெயர் உள்ளது. ஏனென்றால் கோலி எந்தத் தொடரில் விளையாடினாலும் கோலி பெரும்பாலும் சதம் அல்லது அரை சதம் அடிக்கத் தவறுவதில்லை. இதனால் அவரது ரன்கள் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 அனைத்திலும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டிலும் அவரது ரன் வேட்டை யாரும் எட்டாத வகையில் உயர்ந்திருந்தது. கடந்த ஆண்டில் 11 சதங்களும், 9 அரை சதங்களும் அவர் அடித்துள்ளார். அத்துடன் கடந்த ஆண்டு முதல் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு அணிகளுக்கும் கேப்டனாக இருந்து வருகிறார்.

இதனால் கடந்த ஆண்டின் சிறந்த ஆண் கிரிக்கெட்டர் விருதை விராட் கோலிக்கு வழங்குவதாக ஐசிசி அறிவித்தது. இதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதுகளையும் விராட் கோலிக்கே வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விருதுகளின் மூலம் ஒரே ஆண்டில் ஐசிசி மூன்று விருதுகளையும் என்ற வரலாற்று சாதனையை கோலி படைத்துள்ளார்.

புதிய வரலாறு படைத்துள்ள விராட் கோஹ்லிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. கிரிக்கெட் ரசிகர்களை போலவே, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களின்  வாழ்த்து மழையிலும் கோஹ்லி நனைந்து வருகிறாற்.

அந்த வகையில் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரும் விராட் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கம் மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்து சச்சின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “கடின உழைப்பு எப்பொழுதும் வெற்றியை தான் தரும். ஐ.சி.சி.,யின் ஹாட்ரிக் விருதுகளை வென்ற விராட் கோஹ்லிக்கு எனது வாழ்த்துக்கள். விராட் கோஹ்லியின் சாதனைகளை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் இந்த ட்வீட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Mohamed:

This website uses cookies.