கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த சேவாக்
இன்று 45வது பிறந்தநாள் கொண்டாடும் சச்சின் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் உட்பட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் தற்போதையை இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, சச்சினின் சாதனைகளை வேகமாக விரட்டி வருகிறார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 463 போட்டிகளில் பங்கேற்ற சச்சின் மொத்தமாக 49 சதங்கள் விளாசியுள்ளார் சச்சின். தவிர, ஒருநாள் அரங்கில் முதலில் 200 ரன்கள், என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் சச்சின்.
இந்நிலையில் சச்சின் இன்று தனது 45வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதற்காக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. அந்த வரிசையில் முன்னாள் அதிரடி மன்னன் சேவக், தனது ஸ்டைலில், வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேவக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’ சச்சின் வெறும் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, எனது உலகம். எல்லாருக்கும் அவர் தான் உலகம். கிரிக்கெட் பேட்டை பலமான ஆயுதமாக மாற்றி எங்களைப்போன்றவர்களும் பயன்படுத்த கொடுத்த பகவான் சச்சினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.’ என அதில் குறிப்பிட்டுள்ளார். இவரைப்போல மேலும் பல கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இதே போல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சச்சின் டெண்டுல்கருக்கு தங்களது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
அதில் சில;