2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது தான் எனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் சச்சின் டெண்டுல்கர் விளக்கம்
சச்சின் டெண்டுல்கர் தற்பொழுது ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தனது வாழ்நாளில் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் தருணம் என்றால் அது உலக கோப்பை தொடரை வான்கடே மைதானத்தில் வைத்து வென்றது தான் என்று கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 6 முறை உலக கோப்பை தொடரில் விளையாடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை தொடர் வரலாற்றிலேயே அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த ஒரே வீரர் அவர் மட்டும்தான். இன்னும் செல்லமாக உலகக் கோப்பையின் ஹீரோ என்றே அவரை அழைப்பார்கள். அந்த அளவுக்கு உலக கோப்பை தொடரில் என்று வந்துவிட்டால் சிறப்பாக விளையாடுவார். இருப்பினும் அவருடைய உலகக் கோப்பை தாகம் தனது கடைசி மற்றும் 6-வது உலகக் கோப்பை தொடரில் தான் கிடைத்தது.
சச்சின் டெண்டுல்கரும் உலகக்கோப்பை கனவும்
உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய ரசிகர்கள் இன்று அனைத்து உலக ரசிகர்களுக்கும் தெரியும் அதுதான் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் கடைசி உலகக்கோப்பை என்று. சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை 1983ஆம் வருடம் கபில்தேவ் உலக கோப்பையை தூக்குவதை பார்த்துதான் தொடங்கினார். நாமும் இதுபோல் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக உலக கோப்பையை பெற்று தர வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது கனவை நோக்கி துரத்த ஆரம்பித்தார்.
1996 ஆம் ஆண்டு அரையிறுதி வரை சென்று உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி கோட்டை விட்டது. தனியாளாக சச்சின் டெண்டுல்கர் மிகச்சிறப்பாக அந்த உலகக் கோப்பையை விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 2003ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை இந்திய அணி மிக சிறப்பாக விளையாடி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி பெற்றது. அந்த தொடரிலும் சச்சின் டெண்டுல்கர் அடித்த ரன்கள் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட மாட்டார்கள். அந்த தொடரில் மட்டும் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் குவித்துள்ளார். இன்று வரை ஒரு தனி உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த சாதனையாக அதுதான் தற்பொழுது வரை இருக்கிறது. 2003ஆம் கடந்த உலக கோப்பை தொடரில் சிறந்த வீரருக்கான மேன் ஆஃப் த சீரியஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டாலும், சச்சின் டெண்டுல்கர் சந்தோசமாக இல்லை.
2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை
2011ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக அதிக ரன்களும் மேலும் அந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரராக திகழ்ந்தார். இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக சதம் அடித்தார். அரையிறுதிப் போட்டியில் 85 ரன்கள் அடித்து மிக சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால் இறுதிப் போட்டியில் ஸ்ரீலங்கா மிக சிறப்பாக முதல் இன்னிங்சை விளையாடியது. மஹேல ஜெயவர்தன 103 ரன்கள் எடுத்து ஆட்டம் முடியும் வரை அவுட் ஆகாமல் இருந்தார். மறுமுனையில் சங்ககாரா 48 ரன்கள் அதிரடியாக விளையாட ஸ்ரீலங்கா 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சேவாக் 0 ரன்னிலும் சச்சின் டெண்டுல்கர் 18 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
ஆனால் அதன் பின்னர் கௌதம் கம்பீர் 97 ரன்கள் குவிக்க மறுமுனையில் கேப்டன் மகேந்திர சிங் தோனி 91 ரன்கள் குவிக்க, விராட் கோலி 35 ரன்கள் குவிக்க, கடைசியில் இந்திய அணியால் வெற்றி பெற முடிந்தது. அந்த வெற்றியுடன் சச்சின் டெண்டுல்கரின் உலக கோப்பை தாகமும் நிறைவுக்கு வந்தது.
நாங்கள் மட்டும் பெற்ற வெற்றி அல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் பெற்ற வெற்றி
இதுகுறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர் எனது வாழ்நாளில் நான் உலக கோப்பையை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வைத்து தொட்டுப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் இந்தக் கனவை நான் எப்பொழுதாவது எப்படியாவது நிறைவேற்றி விடுவேன் என்று எனக்குள் அடிக்கடி நானே சொல்லிக்கொள்வேன். சிறுவயதிலிருந்து அதற்காக எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
உலகக் கோப்பை கனவு எனது கடைசி உலகக் கோப்பை தொடரில் நனவானது தற்போது வரை தன் கண்களுக்குள் இருப்பதாக கூறியிருக்கிறார். உலக கோப்பை தொடரை வென்ற உடன் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களுடன் இணைந்து கொண்டாடியது. அந்த வெற்றி நாங்கள் மட்டும் பெற்ற வெற்றி அல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் பெற்ற வெற்றி என்று கூறியுள்ளார். இந்தியா வெற்றி பெற்றவுடன் யூசுஃப் பதான்மற்றும் விராட் கோலி என்னை தூக்கினார்கள், நான் அவர்களிடம் தயவுசெய்து என்னைக் கீழே போட்டு விடாதீர்கள் என்று நகைச்சுவையாக கூறினேன். இறுதியாக ஒவ்வொருவரும் அவர்களுடைய கனவை நோக்கி கடுமையாக உழைக்க வேண்டும் என்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அந்த கனவுக்கு உண்மையாக உழைக்கும் பட்சத்தில் அந்த கனவு நிறைவேறும் என்று இளம் சமூகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.