10,000 ரன் அடித்த தோனிக்கு சச்சின் வாழ்த்து!!

 

ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து தோனி சாதனைப்பைடத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா நேற்று விளையாடியது. இதில் தோனி இந்த சாதனையை செய்துள்ளார். சர்வதேச அளவில் ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 12வது வீரர் என்ற பெருமை தோனியின் சாதனை பட்டியலில் நேற்று இணைந்து கொண்டது. அந்த போட்டியில் தோனி 37ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இந்திய அளவில் சச்சின், ராகுல் திராவிட், கங்குலி ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.தோனி இதுவரை 319 போட்டிகளில் விளையாடி 10 சதம், 67 அரைசதங்களுடன் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

அதுமட்டும் அல்லாமல் விக்கெட் கீப்பராக இலங்கையில் சங்ககாராவுக்கு பிறகு தோனியே இச்சாதனையை செய்துள்ளார். 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பெரும்பாலும் தொடக்க ஆட்டக்காரர்களாகவே இருந்துள்ளனர். ஆனால் தோனி 6வது இடத்தில் களமிறங்கி இச்சாதனையை செய்துள்ளது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

மேலும், இதே போட்டியில் தனது 300வது கேட்சை பிடித்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 300வது கேட்ச் பிடித்த நான்காவது விக்கெட்கீப்பர் எனும் சாதனையும், 300 கேட்ச் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார்.

அதிககேட்ச் பிடித்த பட்டியலில் ஆஸி வீரர் கில்கிறிஸ்ட் 417 கேட்ச்களை பிடித்து முதலிடத்தில் உள்ளார். இந்திய கேப்டனான விராட் கோலியும் இவ்வரிசையில் விரைவில் இணையவுள்ளார்.

 

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.

இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்த டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தாலும், குல்தீப் யாதவின் மேஜிக் சுழலாலும் இந்திய அணி வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலாவதாக பேட்டிங் செய்த அந்த அணி 7 விக்கெட் இழப்பில் 322 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜோ ரூட் 113 ரன்கள் எடுத்தார். மேலும் கேப்டன் மார்கன் 53 ரன்களும் வில்லி 50 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  ராகுல் டக்அவுட் ஆனது இந்திய அணிக்கு பெரிய அடியாக இருந்தது. அடுத்தடுத்து அனைத்து விக்கெட்களும் இழந்த இந்திய அணி வெறும் 236 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனால் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதமடித்த ஜோ ரூட்டுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் இங்கிலாந்து அணியின் வெற்றியால் 1-1 என சமன் செய்யப்பட்டுள்ளது

Editor:

This website uses cookies.