‘இதெல்லாம் முன்னாடியே நடந்திருக்கனும்..’ விதி தெரியாமல் உளரும் கவுதம் கம்பிர்!

ஹால் ஆஃப் ஃபேம் விதி தெரியாமல் உளறிக் கொட்டும் கவுதம் காம்பீர்

லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டோனல்ட் ஆகியோர் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் என்ற புகழ்பெற்றோர் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆஸ்த்ரேலிய மகளிர் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் காத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் என்பவரும் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டுள்ளார். லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூவரும் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமுக்குள் நுழைந்தனர்.

ஒரு வீரர் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆக வேண்டும் அப்போதுதான் ஹால் ஆஃப் ஃபேமில் நுழைய தகுதி பெற முடியும், சச்சின் டெண்டுல்கருக்கு சமீபத்தில் தான் அந்தக் காலக்கெடு முடிந்தது.

 

 

 

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற 6வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் சச்சின்.

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் சச்சின்.

ஹால் ஆஃப் ஃபேம் விதி தெரியாமல் உளறிக் கொட்டும் கவுதம் காம்பீர் இந்நிலையில் இதுகுறித்து தனது பக்கத்தில் ட்வீட் செய்துள்ள கௌதம் கம்பீர் இது பல வருடங்களுக்கு முன்னதாகவே நடைபெற்றிருக்க வேண்டும், மேலும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே இது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார் .

ஆனால் ஹால் ஆப் பேம் விதிப்படி ஒரு கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்று 5 வருடங்கள் கழித்து மட்டுமே இந்த விருது கொடுக்கப்படும். மேலும் இதற்கு இதனைப் போன்று பல விதிகள் உள்ளன. ஆனால் இந்த அடிப்படை விதி கூட தெரியாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் உளறிக் கொட்டியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர்

 

 

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் உலகில் பல வரலாற்று சாதனைகளுக்கு சொந்தக்காரர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் இவர்தான். அதேபோல ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்தவர் என்ற சாதனையையும் இவரை தன் வசம் வைத்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் இவரே முதலில் படைத்தார். இவ்வாறு சச்சின் டெண்டுல்கரின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

இந்தக் கெளரவத்திற்கு சச்சின் உடன் சேர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொணால்ட் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை கேதரின் ஃபிட்பாட்ரிக் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Sathish Kumar:

This website uses cookies.