எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான் சச்சின் டெண்டுல்கர் பேச்சு

 எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான் சச்சின் டெண்டுல்கர் பேச்சு

சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய அணிக்காக 24 வருடங்கள் விளையாடியவர் அவரது காலகட்டத்தில் பேட்டிங்கில் அவர் படைத்த சாதனைகள் இல்லை என்று கூறலாம். மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளிலும் 463 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டி20 போட்டியிலும் 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

தற்போது வரை அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் இவர்தான் அதிக ஒருநாள் போட்டிகளில் ஆடியவரும் இவர்தான் அதே நேரத்தில் முதன்முதலாக ஒரு நாள் போட்டியில் இரட்டை சதமடித்தவரும் சச்சின் டெண்டுல்கர்தான். டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு விதமான போட்டிகளிலும் அதிகபட்சமாக ரன் குவித்த வீரர் இவர்தான். ஐபிஎல் தொடரிலும் ஒரு சதம் அடித்திருக்கிறார். இப்படி அவரது சாதனைகள் எக்கச்சக்கமாய் எகிறிக் கொண்டே செல்கிறது.

ஆனால், இவரது வாழ்க்கையில் பெரிதாக கோப்பையில் இந்திய அணி வென்றது இல்லை. கடைசியாக 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை மட்டும் வென்றது. அதே நேரத்தில் அவ்வப்போது ஒருசில தொடரையும் வென்றது.

ஆஸ்திரேலிய அணி 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்று டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று சாதனை படைத்தது தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான வெற்றி தோல்விகளையும் ஏற்ற இறக்கங்களையும் பார்த்திருந்தாலும் தனக்கு மிகவும் பிடித்த டெஸ்ட் தொடர் இதுதான் என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். அவர் கூறுகையில்…

இந்த டெஸ்ட் தொடரின்போது இந்திய மண்ணில் இதுதான் தனது கடைசி டெஸ்ட் தொடர் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் அறிவித்திருந்தார். சொந்த மண்ணில் விளையாடும் அந்த டெஸ்ட் தொடர் எங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ஆஸ்திரேலியாவிற்கு முக்கியமாக இருந்தது. மும்பையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்பின்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லட்சுமணன் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் பின் தங்கி இருந்தும், வெற்றி பெற்றோம். அதன் பின்னர் சென்னையில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை 2 க்கு 1 என்ற கைப்பற்றினோம். என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எதுவென்றால் இந்த டெஸ்ட் தொடரை தான் சந்தேகமும் ஏதுமின்றி கூறுவேன். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்

Prabhu Soundar:

This website uses cookies.