இந்த 2 பேர் மட்டும் தான் உலக்கோப்பையின் மிகச்சிறந்த வீரர்கள்: சச்சின் டெண்டுல்கர் புகழாரம்! இந்திய வீரர்கள் உள்ளனரா?

In Federal Court papers filed this month and reviewed by Reuters, Tendulkar said Sydney-based Spartan Sports International agreed in 2016 to pay him at least $1 million a year to use his image, logo and promotional services to sell "Sachin by Spartan" sporting goods and clothing.

”என்னை பொறுத்த வரை ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் மட்டுமே உலக கோப்பை தொடரில் மிகச் சிறந்த வீரர்கள் என அலாதியாக புகழாரம் சூட்டினார் சச்சின் டெண்டுல்கர்.”

உலக கோப்பை கிரிக்கெட் நிறைவடைந்ததும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்த கனவு அணியில் இந்தியாவில் இருந்து ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே இடம் பிடித்திருந்தனர். இந்த கவுரவ அணியில் கேப்டன் விராட் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் இருந்து 11 பேரை தனக்கு பிடித்தமான அணியாக தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். அவரது கனவு அணியில் 5 இந்திய வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள். ஆனால் மூத்த விக்கெட் கீப்பர் டோனி சேர்க்கப்படவில்லை.

LEEDS, ENGLAND – JULY 06: Jasprit Bumrah high fives Rohit Sharma of India after he gets Angelo Matthews of Sri Lanka out during the Group Stage match 

தெண்டுல்கரின் கனவு அணி வருமாறு:- ரோகித் சர்மா (இந்தியா), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), வில்லியம்சன் (கேப்டன், நியூசிலாந்து), விராட் கோலி (இந்தியா), ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா (3 பேரும் இந்தியர்), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து).

மேலும் இதனை தெரிவித்துவிட்டு சச்சின் டெண்டுல்கர் உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் மற்ற அனைத்து வீரர்கலை விடவும் சிறப்பாக விளையாடினர். அனைவரும் நன்றாக விளையாடினர்.

India’s Rohit Sharma (C) smiles after receiving the man of the match award following victory the 2019 Cricket World Cup group stage match between India and Pakistan 

உண்மையை சொல்லப்போனால் மற்ற அனைத்து வீரர்களையும் விட ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் பட்டையை கிளப்பி விட்டனர். ரோகித் சர்மா 5 சதம் விளாசி இருக்கிறார். வேறு யாரும் இதனை செய்ததில்லை.

அவர் தனது விக்கெட்டின் மதிப்பை உணர்ந்து விளையாடினார். இது விலைமதிப்பு மிக்கதாகும்.  ஜஸ்பிரிட் பும்ரா  விக்கெட்டுக்கு பெரிதாக எடுக்கவில்லை என்றாலும் அவரது இருப்பு உணரப்பட்டது. அனைத்து பேட்ஸ்மேன்களும் அவரை கண்டு சற்று பயத்துடன் ஆடினர். என்னை பொறுத்த வரை ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் மட்டுமே உலக கோப்பை தொடரில் மிகச் சிறந்த வீரர்கள் என அலாதியாக புகழாரம் சூட்டினார் சச்சின் டெண்டுல்கர்.

Sathish Kumar:

This website uses cookies.