பிசிசிஐ ஆலோசனை குழுவில் இருந்து முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின், கங்குலி மற்றும் VVS லக்ஷ்மன் ஆகியோரை நீக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின், கங்குலி மற்றும் VVS லக்ஷ்மன் ஆகியோர் அணியில் சிறப்பாக செயல்பட்டு ஓய்வுபெற்ற பிறகு, பிசிசிஐ நிர்வாகம் அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆலோசனை குழுவில் இடம் அளித்து சிறப்பித்தது.
இந்நிலையில், இவர்கள் மூவரையும் பிசிசிஐ நிர்வாகம் ஆலோசனை குழுவில் இருந்து நீக்க தற்போது முடிவு செய்துள்ளது. காரணம், கங்குலி பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார், மேலும் கிரிக்கெட் கமென்டரியும் செய்து வருகிறார்.
மேலும், லக்ஷ்மன் மீடியா வேலைகளிலும், ஐபில் போட்டிகளில் சன் ரைசெஸ் அணிக்கு ஆலோசகராகவும் உள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் நிறைய பொறுப்புகள்் இருப்பதால் ஆலோசனை குழுவில் நிரந்தரமாக ஈடுபட முடியாது. இதனால் இவர்கள் இருவருக்கும் ஆலோசனைக் குழுவில் இருந்து விடுப்பு அளிக்க பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆலோசகராகவும், அவரது மகன் அர்ஜுன் இந்தியா அண்டர் 19 அணியில் இடம்பெற்றுள்ளார். அல்லது உறவினர் அல்லது நெருங்கிய சொந்தங்கள் யாரேனும் அணியில் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் ஆலோசனைக் குழுவில் இருந்து வெளியேற வேண்டும். இதன்படி சச்சினை இந்த குழுவில் இருந்து விடுவிக்க வீசி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
CAC இன் வேலை சம்பளத்துடன் இருக்கும் என்று இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவிக்கிறது . தற்போது, டெண்டுல்கர், கங்குலி மற்றும் லக்ஷ்மன் ஆகியோர் மரியாதை அடிப்படையில் தங்கள் பாத்திரத்தை வகிக்கிறார்கள். கடந்த ஆண்டு, ஆலோசனைஆலோச ஊதியம் கேட்டது என்று தகவல்கள் வெளிவந்தபோது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிக்கையை ரத்து செய்தது மற்றும் மூவரும் பணம் எதையும் கேட்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.