சச்சினுக்கு COVID-19 பாசிட்டிவ்; நிலைமை என்ன தெரியுமா ?

கொரானவின் இரண்டாவது அலை இந்தியாவில் தற்போது தீவிரமாகி கொண்டிருக்கிறது இதன் காரணமாக பல விதிமுறைகளை இந்திய அரசாங்கங்கள் கொண்டுவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபமாக நடந்து கொண்டிருக்கும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளிலும் பயோ பபில் விதிமுறைகளுக்கு இணங்கி நடைபெற்றுக் கொண்டுள்ளது. எவ்வளவுதான் கட்டுக்கோப்பாக இருந்தாலும் நோய்த்தொற்று பரவிக் கொண்டே வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் உலகின் மிகப்பெரும் ஜாம்பவனாக திகழ்கின்ற சச்சின் டெண்டுல்கர் கொரானா தோற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப் படுத்திக் கொண்டு இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

சமீபமாக நடந்துமுடிந்த சாலை பாதுகாப்பு உலக சுற்று தொடரில், இந்தியா லெஜென்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு மிக சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று கொடுத்தார். இந்நிலையில் சச்சின் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, அந்த போட்டி முடிந்து வீடு திரும்புவதற்கு முன் பயோ பபில் விதிமுறைகளின் படி நானே முன்வந்து பரிசோதனை செய்து கொண்டேன், அதில் தனக்கு கொரான இருப்பதாக உறுதி செய்யப்பட்டது,இதனைத் தொடர்ந்து என்னுடைய குடும்பத்தினருக்கும் கொரான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக எனது குடும்பத்தில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.இந்நிலையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இருந்தபோதும் தனக்கு குறைவான தாக்கமே உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அதில் அவர் கூறியதாவது,எனது உடல்நலனில் அக்கரை கருதி என்னை சப்போர்ட் செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் 34 ஆயிரம் ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் அதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்துள்ளார். இரண்டையும் சேர்த்து சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் தொற்றினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் பரிபூரணம் குணமாக வேண்டுமென்று உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் சச்சினுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Mohamed:

This website uses cookies.