இந்த வீரரை பார்த்தாலே சச்சின் நடுங்குவார்; தேவையில்லாமல் பேசிய ஷாகித் அப்ரிடி
முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் பந்துவீச்சை எதிர்கொள்ள சச்சின் டெண்டுல்கர் எதிர்கொள்ள முடியாமல் திணறுவார் என ஷாகிப் அப்ரிடி கூறியது சச்சின் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.
கொரோனாவின் கோர தாண்டவம் காரணமாக வீட்டிலேயே முடங்கி போயுள்ள கிரிக்கெட் வீரர்கள் தினமும் எதாவது கருத்தை கூறி கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனி போட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சர்ச்சைக்கு கருத்துக்கு பெயர் போன, ஷாகிப் அப்ரிடி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் குறித்து பேசியுள்ளது சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.
இது குறித்து ஷாகித் அப்ரிடி பேசியதாவது;
நான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்லமாட்டார். சோயிப் அக்தரின் சில ஸ்பெல்களில் சச்சின் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் சிறந்த பேட்ஸ்களும் நடுங்கினர்.
மிட்-ஆஃப் அல்லது கவர் திசையில் பீல்டிங் செய்யும்போது நீங்கள் அதை கவனிக்கலாம். அப்போது ஒரு வீரரின் உடல் அசைவுகள் தெரியும். ஒரு பேட்ஸ்மேன் வழக்கமான நிலையில் விளையாடுகிறாரா? அல்லது நெருக்கடியில் இருக்கிறாரா? என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
சோயிப் அக்தர் பயந்தார் என்று நான் சொல்ல மாட்டேன். சச்சின் தெண்டுல்கர் உள்பட பல முன்னணி பேட்ஸ்மேன்கள் அக்தரை எதிர்கொள்ளும்போது பேக்புட் செல்ல வேண்டியிருந்தது.
உலக கோப்பையின்போது சச்சின் தெண்டுல்கர் சயீத் அஜ்மல் பந்தையும் எதிர்கொள்ள அஞ்சினார். இது பெரிய விஷயல்ல. வீரர்கள் நெருக்கடிக்குள்ளாகும்போது, எதிர்கொள்ளவது கடினமானதாகிவிடும்” என்றார்.