விராட் கோலி இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் அறிவுரை

நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற இருக்கிறது. அனைத்து வீரர்களும் தற்பொழுது தயார் நிலையில் இருக்கின்ற நிலையில் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு ஒரு சிறிய அறிவுரை கூறியிருக்கிறார்.

விராட் கோலி சற்று நகர்ந்து விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்

விராட் கோலி எப்போதும் கவர் டிரைவ் ஆடுவதில் விருப்பம் காட்டக்கூடிய ஒரு வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இங்கிலாந்து மைதானங்களில் பந்து எப்பொழுது எந்த வேகத்தில் வருகிறது, அப்படி வருகின்ற பந்து எந்த திசையில் ( ஆஃப் சைடு அல்லது லெக் சைடு ) செல்லப் போகிறது என்பதை நம்மால் கணிக்க முடியாது.

எனவே நாளை நடக்க இருக்கின்ற இறுதிப் போட்டியில் விராட் கோலி சற்று நகர்ந்து விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மிக அற்புதமாக பந்துகளைக் ஸ்விங் செய்யக்கூடிய வல்லமை படைத்தவர்கள். எனவே அவர்களுடைய பந்துகளை சற்று நிதானமாக கணித்து ஆட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

கவர் டிரைவ் இல்லாமல் சச்சின் அடித்த 241 ரன்கள்

இதற்கு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுவது 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த பார்டர் கவஸ்கர் டிராபி தொடர். அந்த தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடியது.

அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 436 பந்துகளைப் பிடித்து 241 ரன்கள் குவித்தார். அந்த ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு கவர் டிரைவ் கூட அடிக்காமல் அவ்வளவு ரன்களை குவித்தது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. சச்சின் டெண்டுல்கருக்கு நிச்சயமாக தெரியும் கவர் டிரைவ் அடிக்க போனால் நிச்சயமாக அது எட்ஜ் ஆகி தான் ஆகி விடுவேன் என்று. எனவே சூழ்நிலையைப் பொறுத்து நிதானமாக கணித்து விளையாடி இறுதியில் தொடரை சமன் முடித்தார்.

அதையேதான் நாளை விராட் கோலி செய்ய வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் தற்போது அறிவுரை கூறியிருக்கிறார். எப்பொழுதும் ஒரே திட்டத்துடன் விளையாடுவது சரியாக இருக்காது என்றும், போட்டி நடக்கும் அன்றைய நாளில் என்ன செய்ய வேண்டுமோ அதை நிதானமாக கணித்து செயல்பட வேண்டும் என்றும் சூசகமாக அறிவுரை கூறியிருக்கிறார்.

Prabhu Soundar:

This website uses cookies.