தற்போது பாகிஸ்தானில் நடந்து கொண்டிருக்கும் தேசிய டி20 தொடர் முடிந்தவுடன் பல பிரச்சனையில் மாட்டி தவித்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் ஓய்வு பெறவுள்ளார்.
“இந்த தேசிய டி20 தொடர் தான் என்னுடைய கடைசி தொடராக இருக்கும் மற்றும் நான் எந்த அணிக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. கடைசி நேரத்தில் தான் நான் ஏமார்ந்துவிட்டேன். என்னை உள்ளூர் போட்டிகளில் தேர்வு செய்வதை பற்றி யாரும் கேள்வி கேட்பதற்கு முன்பு, நான் ஓய்வு பெறுகிறேன், இதுதான் என்னுடைய கடைசி முடிவு,” என ஒரு போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் சயீத் அஜ்மல் தெரிவித்தார்.
அவருடைய பவுலிங் ஸ்டைல் பிரச்சனை முதலில் 2009-இல் தான் வந்தது, ஆனால் அதை உடனடியாக சரி செய்து விட்டு, அதே வருடம் இங்கிலாந்தில் நடந்த டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணிக்கு வாங்கி கொடுத்தார். சர்வதேச அளவிலான தொடரில் 1992 உலககோப்பைக்கு பிறகு முதன் முறையாக அப்போது தான் பாகிஸ்தான் அணி வென்றது.
40 வயதாகும் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், 2014-இல் அவரது பவுலிங் ஸ்டைலை மாற்றினார், இதனால் அவரது விக்கெட் எடுக்கும் திறமை பறிபோனது. அவரது பவுலிங் ஸ்டைல் மாற்றுவதற்கு முன் வரை, அவர் எதிரணிக்கு பாரமாக இருந்தார். நவம்பர் 2011 முதல் டிசம்பர் 2014 வரை, ஒருநாள் பந்துவீச்சாளர்க்கான தரவரிசையில் முதல் இடத்திலே இருந்தார் சயீத் அஜ்மல்.
மீண்டும் அவரது பவுலிங் ஆக்சன் மீது பிரச்சனை வந்தது, இதனால் அதை திருத்த முன்னாள் வீரர் முஷ்டாக்கிடம் சென்றார், ஆனால் 2015 உலகக்கோப்பையில் சொல்லிக்கொள்ளும் படி அவர் செயல்படவில்லை. அவர் கடைசியாக பாகிஸ்தான் அணிக்காக தாக்காவில் 2015ஆம் ஆண்டு விளையாடினார்.
பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான இஸ்லாமாபாத் யூனிடேட் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக சயீத் அஜ்மலை நியமித்தார்கள்.
அவர் விளையாடிய 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். மேலும் 113 ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட்டும், 64 டி20 சர்வதேச போட்டிகளில் 85 விக்கெட்டும் எடுத்திருக்கிறார். 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர் அஜ்மல் தான். 2011ஆம் ஆண்டு 8 போட்டிகளில் 50 விக்கெட் எடுத்தார் அஜ்மல்.
அவர் இதுவரை சிதறா-இ-இம்தியாஸ், சிவிலியன் விருதுகளை வென்றுள்ளார் ஆனால் அவர் ஒருமுறை கூட ஒருநாள் போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்றதில்லை.