இந்தியாவில் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் நடைபெற இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
இந்த போட்டியில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது.இந்நிலையில் புதிய கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணி தனது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
சமீபமாக நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ஷ்ரெயஸ் ஐயருக்கு பலமான காயம் ஏற்பட்டது,இதனால் இவரால் ஐபிஎல் போட்டியில் பங்கு கொள்ள முடியாமல் போனது இதன் காரணமாக கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிர்க்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் வல்லுனர்கள் தங்களது பாராட்டை தெரிவித்தனர். இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர் சம் பில்லிங்ஸ் ரிஷப் பண்ட் குறித்து கூறியதாவது.
டெல்லி கேப்பிடல் அணியின் வீரரான இங்கிலாந்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சம் பில்லிங்ஸ்,ரிஷப் பண்ட் உடனான தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, நான் முதன்முதலில் ரிஷப் பண்ட் பார்க்கும்பொழுது அவர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் கிறிஸ் மோரிஸ், நாதன் கொல்டர் நைல் போன்ற பந்துவீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது நான் ராகுல் டிராவிட் யார் இந்த பையன் என்று கேட்டேன், ஆனால் தற்பொழுது தான் யார் என்பதை இந்த உலகிற்கு தெரியப்படுத்திவிட்டார் என்று பாராட்டினார்.மேலும் அவரைப் போன்று ஒரு திறமையான இளம் வீரரை இதுவரை பார்த்ததில்லை என்று கூறிய அவர் ரிஷப் பண்ட் பலமான முன்னேற்றத்திற்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சாம் பில்லிங்ஸ் கொள்ளவில்லை,இந்நிலையில் மீண்டும் 2021 ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியில் திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.