இவர் மட்டும் இல்லைனா சென்னை அணி அவ்வளவு தான்; கவுதம் கம்பீர் சொல்கிறார் !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கர்ரான் மட்டும் தான் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருவதாக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

2020 க்காண ஐபிஎல் போட்டிகளில் எதிர்பாராதவிதமாக இந்த வருடம் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை இருந்தபோதும் கடைசியாக ஆடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது முக்கிய காரணம் இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் சாம் கரன் கெய்க்வாட், மற்றும் ஜடேஜா.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கெய்க்வாட் 53 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினார் கடைசியாக வந்த ஜடேஜா மற்றும் சாம்கரனின் அதிரடியான ஆட்டம் சிஎஸ்கேவை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது.

மேலும் சென்னை அணியில் பல திறமையான வீரர்கள் இருந்தபோதும் அவர்களால் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட முடியாததால் எதிர்பாராதவிதமாக இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறமுடியவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை மற்றும் கவலையை ஏற்படுத்தியது .

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த தொடர் தோல்விகள் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர், கவுதம் கம்பீர் சென்னை அணியின் இளம் வீரர் சாம் கர்ரானை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் கூறுகையில் சிஎஸ்கே அணியில் சாம் கரன் எல்லா ஆட்டங்களிலும் சிறப்பாக  செயல்பட்டு தனது ஃபார்மை  மேம்படுத்தியுள்ளார். மேலும் தன் இளவயதில் இவர் இவ்வாறு விளையாடுவது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது இவர் வருங்காலங்களில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்பார் என்றும் கூறினார்.

Mohamed:

This website uses cookies.