விலையை ஏத்திவிட்ட குஜராத் டைட்டன்ஸ்; 20 வயது இளம் வீரரை 8.4 கோடி ரூபாய் கொடுத்தது ஏலத்தில் எடுத்தது சென்னை அணி; யார் இந்த சமீர் ரிஸ்வி…?
உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளம் பேட்ஸ்மேனான சமீர் ரிஸ்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கத்தை விட மிக சிறப்பாக செயல்பட்டு தனக்கு தேவையான வீரர்களை சரியான விலைக்கு ஏலத்தில் எடுத்து வருகிறது.
ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷர்துல் தாகூரை சரியான விலைக்கு ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நியூசிலாந்து அணியின் டேரியல் மிட்செல்லை 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அடுத்ததாக உத்திரபிரதேசத்தை சேர்ந்த 20 வயது அதிரடி பேட்ஸ்மேனான சமீர் ரிஸ்வை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8.4 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
வெறும் 20 லட்சத்தை அடிப்படையாக விலையாக நிர்ணயித்திருந்த சமீர் ரிஸ்வியை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. குஜராத் அணியை விலையை ஏத்திவிட்டு அப்படியே பின்வாங்கியது, இதன்பின் டெல்லி அணியும் தன் பங்கிற்கு விலையை ஏத்திவிட்டு பின்வாங்கி கொண்டது. இதன் மூலம் இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8.4 கோடி ரூபாய்க்கு சமீர் ரிஸ்வியை ஏலத்தில் எடுத்துள்ளது.
யார் இந்த சமீர் ரிஸ்வி;
உத்திரபிரதேசத்தை சேர்ந்தவரான சமீர் ரிஸ்வி அதிரடி உள்ளூர் தொடர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை பெற்றவர். உத்திரபிரதேச டி.20 தொடர், சையத் முஸ்தாக் அலி தொடர் என அனைத்திலும் தனது வேலையை சரியாக செய்து கொடுத்து வரும் இவரை, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் வலது கை சுரேஷ் ரெய்னா என பாராட்டுவார்கள். சுரேஷ் ரெய்னாவுடன் ஓப்பிடப்படும் அளவிற்கு தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சமீர் ரிஸ்வி இதுவரை 11 டி20 போட்டிகளில் விளையாடி அதில் 295 ரன்கள் குவித்துள்ளார்.