ஸ்மித்க்கு சப்போர்ட் செய்து, மீடியாவை கண்டித்த டேரன் சமி

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் சமி, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் க்கு சப்போர்ட் செய்து பத்திரிக்கையாளர்கள் ஸ்மித் பற்றி பரப்பிய செய்தியை கண்டித்து, அதற்க்கு மறுக்கருத்து தெரிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்டேலியா முன்னாள் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் பென்கிராஃப்ட் மூவருக்கும் தடை விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். ஆனால், உள்ளூர் போட்டிகளை ஆடிக்கொள்ளலாம் எனவும் கூறியது.

குளோபல் டி20 போட்டியில் ஸ்மித் ஒப்பந்தம் 

SYDNEY, AUSTRALIA – JANUARY 2 : Steve Smith throws during a training session before the fifth Ashes cricket test match between Australia and England at the Sydney Cricket Ground on January 2, 2018 in Sydney, Australia. (Photo by Philip Brown/Getty Images)

கனடாவில் நடைபெறும் குளோபல் டி20 போட்டியில் 2018 ம் ஆண்டு சீசனில் ஆட ஸ்மித் வார்னர் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்மித் டொரோண்டோ அணிக்கும் வார்னர் வின்பெக் ஹாக்ஸ் அணிக்கும் ஆடுகின்றனர்.

ஸ்மித் மது அருந்துவது போன்ற காட்சி..

 

நியூயார்க் க்கில் தனியார் பப் ஒன்றில் ஸ்மித் அமித் பீர் குடித்து கொண்டிருந்தார். இதை பத்திரிக்கையாளர் ஒருவர் புகைபடம் எடுத்து செய்தித்தாளில் வெளியிட ஸ்மித் க்கு மீண்டும் தலைவலி ஆரம்பித்தது. சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவ ஆரம்பித்தது.

டேரன் சமி சப்போர்ட்

ஸ்மித் ஆட இருக்கும் டொராண்டோ அணியின் கேப்டனாக இருக்கும் டேரன் சமி இந்த விவகாரத்தில் சப்போர்ட் செய்துள்ளார். நானும் நியூயார்க்கில் நடந்ததை பத்திரிக்கையில் பார்த்தேன். எல்லாம் கையில் தான்  உள்ளது. நீங்கள் காட்டியது சரியான விதம் அல்ல.

விளையாட்டு வீரராக இருக்கும்  நம்மை அனைவரும் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். ஆதலால், நல்லதையே செய்ய வேண்டும். இல்லையேல் இது போன்று நடக்க நேரிடும். ஆனால், ஒருவர் மனதளவில் பாதிக்கபட்டு இருக்கும் பொழுது நாம் மேலும் மேலும் அவரை காயப்படுத்த கூடாது. இது மனிதநேயத்திற்கு எதிரானது. சிறிது காலம் அவரை தனியாக விட்டுவிடுங்கள்  என கூறினார்.

கிருத்துவத்தில், நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்துக்கும் தண்டனை உண்டு. அதற்க்காக அவரை அப்படியே விட்டு விடவும் கூடாது. மன்னிக்கவும் வேண்டும் என கூறினார். சக கிருத்துவனான ஸ்மித் க்கும் இது புரியும் என கூறினார்.

Vignesh G:

This website uses cookies.