சானியா மிர்ஸா பாகிஸ்தான் சுதந்திரதினத்திற்கு வாழ்த்து தெரிவித்தது பெரிதும் கலாய்க்கப்பட்டது.அதற்க்கு தக்க பதிலளித்து வாயடைக்கச் செய்துள்ளார் டென்னிஸ் நட்சத்திரம்.
இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா டென்னிஸ் கோர்ட்டில் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகவே இருக்கிறார். அதிலும், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தபோதும் சரி, அதன்பிறகு இரு நாற்றிக்கும் ஏதேனும் ஒன்று வந்தால் அதற்க்கு தனது கருத்தை தெரிவிக்கும் சானியா மிர்ஸா ரசிகர்களால் பெரிதும் கலாய்க்கப்பட்டு வருகிறார். இதை அவர் தக்க பதிலுடனும் எதிர்கொள்கிறார்.
ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்தினத்தை கொண்டாடி வரும்பொழுது, பாகிஸ்தான் நாட்டிற்கு சுதந்திரத்தினம் நேற்று என்பதால் அவர் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கும் தனது பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள் எனது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு!! இந்திய பெண்ணிடம் இருந்து அன்பும் வாழ்த்தும் உங்களுக்கு” என குறிப்பிட்டிருந்தார்.
அதற்க்கு ஒருவர் இன்று உங்களின் சுதந்திர தினமும் அல்லவா? என கேள்வி எழுப்ப சனியாவிற்கு கோபம் வந்தது போலும் தக்க பதிலளித்து வாயடைக்க செய்துவிட்டார்.
அதற்கு அவர் பதில் அளித்ததாவது, என் நாட்டிற்கு நாளை (ஆகஸ்ட் 15) தான் சுதந்திர தினம், எனது கணவர் மற்றும் அவரது நாட்டு மக்களுக்கு இன்று (ஆகஸ்ட் 14) சுதந்திர தினம். தற்போது உங்களுக்கு குழப்பம் தேர்ந்து இருக்கும் என நம்புகிறேன். நீங்கள் குழப்பம் கொள்ளவேண்டாம் என நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்து வாயடைக்க செய்தார்.
பாக்கிஸ்தானுடனான தனது உறவு காரணமாக விம்பிள்டன் வெற்றியாளர் இத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டது இது முதல் தடவை அல்ல. 2014 ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநில வர்த்தக தூதராக சானியா நியமிக்கப்பட்டார். எனினும், ஒரு அரசியல்வாதி இவருக்கு ‘பாக்கிஸ்தானின் மருமகள்’ என்று பெயரிடப்பட்டதால் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sania Mirza (Credits: Twitter)
சானியா சமீபத்தில் பாக்கிஸ்தான் தனது அனுபவத்தை பற்றி மனம் திறந்து பேசினார்.
“சோயிப் மற்றும் நான் இரு நாடுகளையும் ஐக்கியப்படுத்துவதற்கு திருமணம் செய்து கொண்டேன் என்று நிறைய பேர் கருதுகின்றனர். அது உண்மை அல்ல. நான் பாக்கிஸ்தானில் இருந்த போதெல்லாம், ஒவ்வொரு வருடமும் என் உறவுகளை சந்திக்கப் போகிறேன் – நான் அங்கு செல்வது மிகப்பெரியது. முழு நாடும் என்னை ‘பாபி’ என்று அழைக்கிறது, அவர்கள் என்னை மிகவும் மதிக்கிறார்கள், ” என்று இந்துஸ்தான் டைம்ஸிடம் அவர் தெரிவித்தார்.