ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடினார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
அப்போது அவரிடம் உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதேசமயம் சானியாவின் கணவரும் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் பெயரைச் சொல்லக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டிருந்தது.
தோனி அல்லது கோலி என இருவரில் யார் பெயரைச் சொல்லியிருந்தாலும் அது விவாதப்பொருளாக மாறியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் சானியா சொன்ன பதில் அனைவருக்கும் ஏற்புடையதாகவே இருந்தது.
சானியா மிர்சா சொன்ன பதில் – சச்சின் டெண்டுல்கர்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 9 தொடர்களை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
மகேந்திர சிங் தோனியை தொடர்ந்து விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற போது சில கேள்விகள் எழுந்தது. கேப்டன் பொறுப்பு சுமையாகி கோலியின் பேட்டிங் திறன் குறைந்துவிடும் என்று பேசப்பட்டது.
ஆனால், கேப்டன் பொறுப்பேற்றது அதில் கோலியின் அதிரடி ஆட்டமும் உக்கிரமடைந்துள்ளது. அதேபோல், வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருகிறார்.
தற்போது, இலங்கை அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் சாதனையை சமன் செய்துள்ளது.
2015-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக தான் இந்த சாதனை வெற்றி தொடங்கியது. தற்போது இலங்கைக்கு எதிரான தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
1.இலங்கை 2-1(3), 2015 (சொந்த மண்ணில்)
2.தென் ஆப்பிரிக்கா 3-0(4), 2015-16
3.வெஸ்ட் இண்டீஸ் 2-0(4), 2016 (சொந்த மண்ணில்)
4.நியூசிலாந்து 3-0(3), 2016-17
5.இங்கிலாந்து 4-0(5), 2017
6.வங்கதேசம் 1-0(1), 2017
7.ஆஸ்திரேலியா 2-1(4), 2017
8.இலங்கை 3-0, 2017 (சொந்த மண்ணில்)
9.இலங்கை 1-0(3), 2017-18
மேலும், கேப்டனாக ஒரே ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உடன் விராட் கோலி பகிர்ந்து கொண்டுள்ளார். 2005-ம் ஆண்டில் 31 வெற்றிகளை பாண்டிங் குவித்ததே இதுநாள் வரையில் சாதனையாக உள்ளது. தற்போது கோலியும் இந்த ஆண்டில் 31 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
31- ரிக்கி பாண்டிங், 2005
31-விராட் கோலி, 2017
29-ஜெயசூர்யா, 2001
29-ரிக்கி பாண்டிங், 2005
29-ரிக்கி பாண்டிங், 2007
29-ஸ்மித், 2007