தனது உலககோப்பை லெவனை அறிவித்த சஞ்ச்ய் மாஞ்சரேகர்! ஜாம்வான்களை ஒதுக்கி கடுபேற்றும் மும்பை சஞ்சு! ஜடேஜா இருக்கிறாரா?

உலககக்கோப்பை முடிந்து விட்டது, முன்னாள்கள் சிலர் தங்கள் உலகக்கோப்பை சிறந்த லெவனை இந்த உலகக்கோப்பை சிறந்த ஆட்டத்திறனை வைத்து அறிவித்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் அன்று தன் லெவனை அறிவித்தார், தற்போது சஞ்சய் மஞ்சுரேக்கர் தன் உலகக்கோப்பை லெவனை அறிவித்துள்ளார்.

இதில் தொடக்க வீரராக 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 443 ரன்களை 63.28 என்ற சராசரியுடன் எடுத்துள்ள ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார், இவருடன் களமிறங்க இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்களை விளாசிய இந்திய அணியின் ஹிட்மேன் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார், ரோஹித் சர்மா 648 ரன்களை பிரமாதமான 81 ரன்கள் சராசரியில் எடுத்துள்ளார்.

MANCHESTER, ENGLAND – JULY 10: Ravindra Jadeja of India reaches his half century during resumption of the Semi-Final match of the ICC Cricket World Cup 2019 between India and New Zealand after weather affected play at Old Trafford on July 10, 2019 in Manchester, England. (Photo by Michael Steele/Getty Images)

இந்த அணியில் இந்திய கேப்டன் விராட் கோலி இடம்பெற்றுள்ளார், ஆனால் கேப்டன்சியை கேன் வில்லியம்சனுக்கு அளித்துள்ளார் சஞ்சய்.  அதே போல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாக தோனியும் இல்லை, ஜோஸ் பட்லரும் இல்லை, மாறாக ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரியைத் தேர்வு செய்துள்ளார்.

ஆச்சரியகரமான இன்னொரு தேர்வு பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரிடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல் இடது கை ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனை சேர்த்த அதேவேளையில் இடது கை ஸ்பின்னராக நியூஸிலாந்தின் சாண்ட்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதிலும் ஜடேஜாவை தேர்வு செய்யாததை புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் அவரை ஏற்கெனவெ துண்டு துணுக்கு வீரர் என்று வர்ணித்து சஞ்சய் கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவிருக்கலாம்.

சஞ்சய் மஞ்சுரேக்கரின் உலகக்கோப்பை லெவன் வருமாறு:

ஜேசன் ராய், ரோஹித் சர்மா, ஷாகிப் அல் ஹசன், விராட் கோலி, கேன் வில்லியம்சன், அலெக்ஸ் கேரி, சாண்ட்னர், மிட்செல் ஸ்டார்க், ஜோப்ரா ஆர்ச்சர், ஷாஹின் ஷா அப்ரீடி, ஜஸ்பிரித்  பும்ரா.

Sathish Kumar:

This website uses cookies.