உலகக்கோப்பை தோல்வி எதிரொளி: இந்த 2 முக்கிய புள்ளிகளும் கண்டிப்பாக காலி

உலகக் கோப்பை தொடரில் இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

தற்போது இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிந்தது. அதன்படி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி,  பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங்கும் மிக சிறப்பாக இருந்தது.

ஆனால் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்,  சஞ்சய் பங்கர் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், சரியாக செயல்படவில்லை. இவரின் பயிற்சிக்கு கீழ் இந்திய பேட்டிங் சரியாக செயல்படவில்லை. 4ம் இடத்திற்கு சரியான வீரரை தேர்ந்தெடுக்க வில்லை என பல குற்றசாட்டுகள் உள்ளது. இதனால் சஞ்சய் பங்கர் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் பதவியை பி.சி.சி.ஐ நீட்டிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் சஞ்சய் பங்கர் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் டோனியை முன்கூட்டியே இறக்கியிருக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். டோனியை முன்கூட்டியே இறக்கி ஆட்டம் இழந்திருந்தால் அத்துடன் இலக்கை விரட்டும் முயற்சி செத்து போயிருக்கும். டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறப்பு மிக்கவர். அவரது அனுபவம் பின்வரிசையில் தேவை என்பதாலேயே 7-வது வரிசையில் அவரை இறக்கினோம். இந்த வகையில் அவரை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் குற்றமாகியிருக்கும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.
பேட்டிங்கில் 4-வது வரிசையில் நிலையான ஒரு ஆட்டக்காரர் தேவையாக இருந்தார். அது தான் எங்களுக்கு பிரச்சினையாகவும் இருந்தது. ஷிகர் தவான் காயமடைந்து வெளியேறியதால் லோகேஷ் ராகுல் தொடக்க வரிசைக்கு வந்தார். அதன் பிறகு விஜய் சங்கரும் காயத்தால் விலக நேரிட்டதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அரைஇறுதிக்கு முன்பாக மேலும் ஒரு ஆட்டம் இருந்திருந்தால் மயங்க் அகர்வாலை தொடக்க ஆட்டக்காரராக கொண்டு வந்து, லோகேஷ் ராகுலை மிடில் வரிசைக்கு அனுப்பி சோதித்து பார்த்து இருப்போம்.
இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்

Sathish Kumar:

This website uses cookies.