இது ஒன்னும் அவ்வளவு பெரிய விசயம் இல்ல; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் திட்டவட்டம் !!

இது ஒன்னும் அவ்வளவு பெரிய விசயம் இல்ல; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் திட்டவட்டம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஒப்பிடும் அளவிற்கு ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடர் அவ்வளவு சிறப்பு இல்லை என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக சிட்னியில் மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிந்தது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாகவும், 72 வருடத்திற்குப்பிறகும் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியுள்ளது.

தொடரை கைப்பற்றிய பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘1983 உலகக்கோப்பை மற்றும் 1985 உலக சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியதை போல் இந்த தொடரை கைப்பற்றியது பெரிய சாதனை அல்லது அதைவிட மிகப்பெரிய சாதனை’’ என்றார்.

ரவி சாஸ்திரியின் இந்த கருத்திற்கு முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக கபில் தேவ் உள்பட முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் ரவி சாஸ்திரியின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் ரவி சாஸ்திரியையும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அந்த வரிசையில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் இணைந்துள்ளார்.

இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது ஒன்றும் அவ்வளவு பெரிய விசயம் கிடையாது. இதே போல் பல்வேறு தொடர்களை இந்திய அணி சந்தித்துள்ளது. எனவே இந்த தொடர் தான் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அணி பங்கேற்ற தொடர்களில் சிறந்த தொடர்களையும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வரிசை படுத்தியுள்ளார். சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்துள்ள சிறந்த தொடர்கள் பின்வருமாறு.

  • இந்தியா vs இங்கிலாந்து 1971 – 1-0 (3)
    2) இந்தியா vs விண்டீஸ்  1970/71 – 1-0 (5)
    3) இந்தியா vs இங்கிலாந்து 1986 – 2-0 (3)
    4) இந்தியா vs ஆஸ்திரேலியா 2018/19 – 2-1 (4)
    5) இந்தியா vs பாகிஸ்தான் 2003/04 – 2-1 (3)

 

Mohamed:

This website uses cookies.