மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்க்கப்பட்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர்! இந்த முறையாவது வன்மத்தை விதைக்காமல் இருப்பாரா?

மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்க்கப்பட்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர்! இந்த முறையாவது வன்மத்தை விதைக்காமல் இருப்பாரா?

முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆஸ்திரேலிய தொடருக்கான வர்ணனை குழுவில் இடம் பெற்றிருக்கிறார். முன்னாள் இந்திய வீரர் ஆக இருக்கும் இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொலைக்காட்சியில் கிரிக்கெட் தொடர்பான வர்ணனை செய்து வருகிறார். உலக கோப்பை தொடரின் போது நேரடியாக ரவீந்திர ஜடேஜாவை மட்டம் தட்டி பேசியிருந்தார். அவரை துண்டு துக்கடா வீரர் என்றும் கூறியிருந்தார்.

உடனடியாக ரவிந்திர ஜடேஜா அவருக்கு பதிலடி கொடுத்தும், பிசிசிஐயில் புகார் கொடுத்திருந்தார். இதன் காரணமாக உடனடியாக வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். அதே நேரத்தில் தனது சக வர்ணனையாளராக ஹர்ஷா போக்லே உடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். அவரிடம் வன்மத்தை விதைக்கும் வண்ணம் பேசியிருந்தார்.

இப்படி தொடர்ந்து வீரர்களை மட்டும் தட்டிப் அவர்களை மதிக்காமல் இருப்பது, போன்றவற்றை செய்து கொண்டிருந்தார். ஜடேஜா புகார் கொடுத்தவுடன் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். ஐபிஎல் தொடரில் வர்ணனை குழுவில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்டிருந்தார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

இருந்தும் பிசிசிஐ செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான போட்டியை நேரடியாக வர்ணனை செய்யும் குழுவில் இடம் பெற்றிருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். ஆங்கிலம் மற்றும் இந்தியில் வர்ணனை செய்வதற்கு அஜித் அகர்கர், ஹர்ஷா போக்லே, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், அஜய் ஜடேஜா, முரளி விஜய் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். ஹிந்தியில் முகமது கைஃப், விரேந்தர் சேவாக், விஜயதாஹியா, ஜாகிர்கான் ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர்.

இந்திய – ஆஸ்திரேலிய தொட்ருக்கான முழு அட்டவணை

1 வது ஒருநாள்: சிட்னி (நவ. 27)

2 வது ஒருநாள்: சிட்னி (நவ. 29)

3 வது ஒருநாள்: கான்பெர்ரா (டிச. 2)

1 வது டி 20: கான்பெர்ரா (டிசம்பர் 4)

2 வது டி 20: சிட்னி (டிசம்பர் 6)

3 வது டி 20: சிட்னி (டிசம்பர் 8)

1 வது டெஸ்ட்: அடிலெய்ட் (டிசம்பர் 17-21)

2 வது டெஸ்ட்: மெல்போர்ன் (டிசம்பர் 26-30)

3 வது டெஸ்ட்: சிட்னி (ஜன. 7-11, 2021)

4 வது டெஸ்ட்: பிரிஸ்பேன் (ஜன. 15-19)

Prabhu Soundar:

This website uses cookies.