நடராஜனுக்கு முகமது சாமிக்கும் சண்டை மூட்டி விடும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !!

நடராஜனுக்கு முகமது சாமிக்கும் சண்டை மூட்டி விடும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !!

சேலத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார். ஏபிடி வில்லியர்ஸ், விராட் கோலி, மகேந்திர சிங் தோனி ஆகிய சர்வதேச ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் உடனடியாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் களமிறங்கி 2 விக்கெட் வீழ்த்தினார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் தன்னுடைய முதல் சர்வதேச டி20 போட்டியில் பட்டையை கிளப்பிய நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒரு அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் போல் செயல்பட்டு வருகிறார் தங்கராசு நடராஜன்.

இது பிரபல சர்ச்சை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு பிடிக்கவில்லை போலிருக்கிறது. உடனடியாக தனது சகுனி வேலையை ஆரம்பித்துவிட்டார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். நடராஜன் மிகச் சிறப்பாக பந்து வீசுவதால் முகமது சமி அணியில் இருந்து வெளியேற்றப்படலாம் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்று பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் நடராஜன் மிகத் திறமையாக பந்து வீசுகிறார். இதன்மூலம் முகமது ஷமிக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்.

இப்போது இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் நடராஜன் ஆகிய இருவருமே முழுமையான பந்துவீச்சாளராக மாறுவார்கள். காயத்திலிருந்து முகமது சமி மீண்டு வந்தாலும் அவருக்கு நடராஜன் இருக்கும்போது அணியில் இடம் கிடைக்காது. தொடர்ந்து நடராஜன் நன்றாக விளையாடினால் முகமது சமி அணியில் இருந்து ஓரம்கட்டப்படுவார் என்று தெரிவித்திருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இதுபோன்ற அரிய விஷயங்களை கூறுவதில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கில்லாடி. அவ்வப்போது வீரர்களுக்கிடையே சண்டை மூட்டி விடுவார்.

இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து விட்டு அமைதியாக இருந்து கொள்வார். அதன் பின்னர் பச்சோந்தி போல் மாறி உடனடியாக தனது கருத்தினை திரும்பி பெறுவார். இப்படித்தான் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் திறமை குறித்து மட்டமாக பேசினார். உடனடியாக இருவரும் பதிலடி கொடுத்தனர். அதன் பின்னர் மன்னிப்பு கேட்காத குறையாய் பச்சோந்தியை மாறி தனது வார்த்தைகளைத் திரும்பப் பெற்று விட்டார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். அதன் வரிசையில் நடராஜனையும் சேர்த்திருக்கிறார். நடராஜன் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

இளம் வீரரான ஒருவருக்கு ஊக்கம் தான் கொடுக்க வேண்டும் மிகப்பெரிய முகமது சமி போன்ற பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிட்டு அவரை அழுத்தத்திற்கும் தள்ளக் கூடாது. இது சாதாரண மக்களுக்கே தெரியும் ஆனால் இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரியாமல் இருக்காது. இருந்தாலும் இதுபோன்ற சகுனி வேலையை செய்து வருகிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

Prabhu Soundar:

This website uses cookies.