கேரள கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்ஸன் தனது கல்லூரித் தோழி சாருலதாவை இன்று கரம்பிடித்தார்.
திருவனந்தபுரத்தில் கோவளத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், சாம்ஸன், சாருலதாவின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் இன்று நடந்தது. இந்தத் திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.
கேரள ரஞ்சி அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்ஸன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று, இளம்வயதில் அரைசதம் அடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றவர். 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இளம் வீரருக்கான விருதையும் சாம்ஸன் பெற்றுள்ளார். 2018-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.8 கோடிக்கு சாம்ஸனை வாங்கியது.
திருவனந்தபுரத்தில் உள்ள மார் இவானிஸ் கல்லூரியில் படிக்கும்போது இருந்தே சாருலதாவும், சாம்ஸனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். தற்போது சாருலதா மனிதவளத்துறையில் முதுநிலைப்பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்தனர். சாருதலா இந்து நாயர் சமூதத்தையும், சாம்ஸன் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர். இருவரின் திருமணம் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடந்தது.
சஞ்சு சாம்ஸன் மஞ்சள் நிறத்தில் குர்தாவும், முண்டு(வேஷ்டி), சாருதலா சிவப்பு நிறத்தில் புடவையும் அணிந்திருந்தனர். திருமணம் குறித்து சாம்ஸன் கூறுகையில், “ இருவீட்டார் தரப்பில் இருந்து 30 பேர் மட்டும் அழைக்கப்பட்டு, மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இரு குடும்பத்தினரின் ஆசியுடன் திருமணம் நடந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்
மொத்த வீரர்கள் எண்ணிக்கை :25
இந்திய வீரர்கள் :
அஜிங்கியா ரஹானே, கிருஷ்ணப்பா கவுதம்,சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் கோபால், ஆரியமன் பிர்லா, சுதேசன் மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, தவால் குல்கர்னி, மஹிபல் லோம்ரோர், ஜெய்தேவ் உனத்கட் , வருண் ஆரோன் , ஷஷங்க் சிங் , ஷம்பு ராஞ்சன் மனன் வோரா ,ராயன் பாராக்
வெளிநாட்டு வீரர்கள்
ஜோஸ், பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், இஷ்சோதி,லியாம் லிவிங்ஸ்டன், ஓஷேன் தாமஸ், ஆஷ்டன் டர்னர்