ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் இருவரில் யார் விக்கெட் கீப்பர்..? எம்.எஸ்.கே பிரசாத் புதிய விளக்கம்
வங்காளதேச டி20 கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன், ஷிபம் டுபே, ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டி.20 தொடருக்கான இந்திய அணி;
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. கேஎல் ராகுல், 4. சஞ்சு சாம்சன், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 8. வாஷிங்டன் சுந்தர், 9. குருணால் பாண்டியா, 10. சாஹல், 11. ராகுல் சாஹர், 12. தீபக் சாஹர், 13. கலீல் அகமது, 14. ஷிவம் டுபே, 15. ஷர்துல் தாகூர்.
வங்கதேச அணிக்கு எதிரான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம்பெற்றுள்ளதால் விக்கெட் கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டே செயல்படுவார் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து எம்.எஸ்.கே பிரசாத் பேசியாவது;
சஞ்சு சாம்சன் கூடுதல் பேட்ஸ்மேனாகவே அணியில் இடம்பெற்றுள்ளார். ரிஷப் பண்ட்டே விக்கெட் கீப்பராக செயல்படுவார். சஞ்சு சாம்சன் நிறைய முன்னேறியுள்ளார் இதன் காரணமாகவே அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் ஹசாரே தொடரில் சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவரை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாகவே கருதுகிறோம்” என்றார்.