சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஒன்றை அப்லோடியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் ஜாம்பவான் மற்றும் கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் ட்விட்டரில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ளவர். அவரின் ட்வீட்களுக்காக காத்திருக்க ஒரு வட்டாரமே உள்ளது. அவரின் ட்வீட்களும் அவ்வப்போதும் வைரலாகிக்கொண்டே இருக்கும்.
சக காலத்தில் விளையாடிய வீரர்கள் ஆகட்டும், தற்போதுள்ள வீரர்கள் ஆகட்டும் யாரையும் விடாமல் தனது நகைச்சுவையான பாணியிலும், வாழ்த்து தெரிவிப்பது என ட்வீட்கள் மூலம் வெளிக்காட்டுவார். இந்தியாவில் அதிகம் பின்தொடரப்படும் பிரபலங்களும் இவரும் ஒருவர்.
ரசிகர்கள் பிரபலங்களை மட்டும் பின்தொடருவதில்லை அவர்களது வாரிசுகளையும் குறிவைத்து பின் தொடர்ந்து வருகின்றனர்.
அப்படி தான் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கரையும் பின்தொடருகின்றனர். அவர்க்கு தன் தந்தை அளவிற்கு இல்லை என்றாலும் குறிப்பிட்ட கூட்டம் இவரையும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பாக சாராவை ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் தன்னை மணந்துகொள்ளுமாறு தொந்தரவு செய்வதாகவும், மேலும் 20-25 முறை சச்சின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு தொல்லை கொடுப்பதாவும் இதற்கு காவல் நிலையத்திற்கு சச்சின் விரைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. அப்போது சாரா பேசப்பட்டதே.
அதன் பிறகு தற்போது தனது போட்டோவை இணையதளத்தில் அப்லோடி வைரலாகி வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு சாரா லோனாவாலா சென்றபோது எடுத்த போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, நெட்டிசன்ங்கள் பிடித்துக்கொண்டனர்.