பட்டம் பெற்ற தனது மகள் சாரா டெண்டுல்கருடன் சச்சின் அவரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் – படம் உதவி: இன்ஸ்ட்ராகிராம்
சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் லண்டன் பல்கலையில் மருத்துவத்தில் பட்டம் பெற்றுள்ளார். அதை பெருமையுடன் சச்சினும், சாராவும் பகிர்ந்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
டாக்டர் பட்டம் பெற்ற சாரா டெண்டுல்கரின் புகைப்படம் இணையதளத்தில் இன்ஸ்ட்ராகிராமில் வெளியிடப்பட்ட சில மணிநேரங்களில் பாராட்டுக்கள் குவிந்து ஏறக்குறைய 90 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு அர்ஜுன் டெண்டுல்கர், என்ற மகனும், சாரா டெண்டுல்கர் என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் சாரா டெண்டுல்கர் தனது பள்ளிப்படிப்பை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் முடித்து லண்டனில் மருத்துவப்படிப்பு படிக்கச் சென்றார். லண்டனில் உள்ள யுனிவெர்சிட்டி காலேஜ் ஆப் லண்டனில் மருத்துவப்படிப்பு முடித்து பட்டமும் பெற்றுள்ளார்.
தனது மகள் சாராவுடன் சச்சின், அஞ்சலி டெண்டுல்கர்
இந்நிலையில், நேற்று முன்தினம் சாரா டெண்டுல்கரின் பட்டமளிப்பு விழா லண்டனில் நடந்தது. இதில் சச்சின் டெண்டுல்கர், அவரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் ஆகியோர் பங்கேற்றனர். பட்டமளிப்புக்கான பாரம்பரிய கறுப்பு நிற உடையில், சாரா டெண்டுல்கர் வந்து பட்டத்தைப் பெற்றதை சச்சினும், அவரின் மனைவி அஞ்சலியும் கைதட்டி வரவேற்றனர். அதன்பின் சாரா பட்டம் பெற்ற உடையுடன் தனது தந்தை சச்சின், தாய் அஞ்சலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். அதில் “என் தந்தையை பெருமைப்படுத்திவிட்டேன்” என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு சாரா பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்ட்ராகிராமில் வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படத்தை ஏறக்குறையச் சிலமணி நேரங்களில் 90 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர், சாரா டெண்டுல்கருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
சாரா டெண்டுல்கர்
சாராவின் சகோதரர் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது கிரிக்கெட் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். லண்டன் சென்ற அர்ஜுன் டெண்டுல்கர் சமீபத்தில் இந்திய அணியுடன் இணைந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.