கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன்

மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் அவரது கேப்டன் பதவி பறிபோகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இலங்கை தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், டெஸ்ட் போட்டிக்கான கேப்டனில் இருந்து சர்பராஸ் அகமதுவை நீக்க வேண்டும் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷாகித் அப்ரிடி கூறுகையில் ‘‘சர்பராஸ் அகமது டெஸ்ட் கேப்டனாக ஆகாமல் இருந்தால், அது அவருக்கு சிறந்ததாக இருக்கும். ஏனென்றால், மூன்று வகை கிரிக்கெட்டிலும் அவர் கேப்டனாக இருந்தால், அது மிகப்பெரிய சுமையாக இருக்கும். ஒயிட் பந்து கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்து வருகிறார்’’ என்றார்.

இந்தியா தான் காரணம்;

இந்தியாவில் உள்ள ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் அளிக்கும் அழுத்தம் காரணமாகவே இலங்கை வீரர்கள் பலர் பாகிஸ்தானுக்கு வர அஞ்சுகிறார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் சஜ் சாதிக், அப்ரிடி கூறியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ” இலங்கை வீரர்கள் பலர் இந்தியாவில் உள்ள ஐபிஎல் அணிகளின் நெருக்கடியில் சிக்கி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இலங்கை வீரர்கள் பலரிடம் பேசி, பாகிஸ்தானில் நடக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்க வாருங்கள் என்றேன். அவர்களும் வருவதாகத் தெரிவித்தார்கள். ஆனால், இந்தியாவில் உள்ள ஐபிஎல் உரிமையாளர்கள், பாகிஸ்தானுக்குச் சென்று பிஎஸ்எல் போட்டியில் விளையாடினால் ஐபிஎல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவோம், ஒப்பந்தம் தரமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்கள். இதன் காரணமாகவே, பாகிஸ்தான் வருவதற்கு இலங்கை வீரர்கள் மறுக்கிறார்கள்.

Mohamed:

This website uses cookies.