தோனியின் திறமை என்னை வியக்க வைத்தது – பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் திறமை தன்னை வியக்க வைத்ததாக கூறியுள்ளார் பாக்சிதான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்.
அவருடைய கீப்பிங் திறமை மற்றும் பேட்டிங்குடன் சேர்ந்து பினிசிங் செய்யும் அசாத்திய குணம் தன்னை வியக்க வைத்ததாக கூறியுள்ளார் அவர்.
இது குறித்து பேசிய அவர்,
நான் தோனியை ஒரே ஒருமுறை தான் நேரில் பார்த்துள்ளேன். 2017 ஜூன் 4ஆம் தேதி மட்டுமே அவரை பார்த்தேன். அன்று தான் இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை ஆகும். ஒரு வீரராக அவரை பார்த்தால் எனக்கு பிரமிப்பாகவும், வியப்பாகவும் உள்ளது.
என கூறியுள்ளார் சர்பராஸ் கான்.