விராத் கோஹ்லிக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் அணி கேப்டன்!!

உலக கோப்பை தொடரில் இந்திய அணியை இம்முறை பாகிஸ்தான் அணி வீழ்த்தும் என விராட் கோலிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது நேற்று பாகிஸ்தானில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

1992ஆம் ஆண்டு பிறகு உலக கோப்பை தொடரில் இதுவரை இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன. அதில் அனைத்திலும் இந்திய அணி வென்றுள்ளது. ஒருமுறை கூட உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தவில்லை. இது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக இருந்தாலும், பாகிஸ்தான் வீரர்களை இந்திய வீரர்கள் தொடர்ந்து கிண்டலடித்து வருவது பாகிஸ்தான் அணி வீரர்களை கடுப்பேற்றி உள்ளது.

அதே போல் பாகிஸ்தான் ஊடகங்களும் அந்த அணியை மிகவும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு சற்றும் மனம் தளராத பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டி அளித்தார்.

இந்த முறையாவது உலகக்கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்துமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்வுக் குழு உறுப்பினர்கள் இந்திய அணியை எதிர் கொள்வதற்காக மட்டுமே உலக கோப்பை செல்லும் 15 பேர் கொண்ட அணியை உருவாக்க வில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அனைத்து தர நாடுகளையும் எதிர்கொள்ளவே சரியான அணியை உருவாக்கி, அதற்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும், 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 180 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இது இந்திய அணிக்கு நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். இதனால் எங்களுக்கு கூடுதல் பலம் என்று விராட் கோலி எச்சரிக்கும் விதம் பேசினார்.

ஆனால் அதற்கு அடுத்ததாக இரு அணிகளும் மோதிய ஆசிய கோப்பை தொடரில் இரு முறையும் இந்திய அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடக்கும் உலக கோப்பை தொடரில் ஜூன் 16ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இரு அணிகளும் மோதுகின்றன.

Prabhu Soundar:

This website uses cookies.