இந்த 11 வீரர்கள் தான் செம்ம மாஸ்; முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிரடி கருத்து !!

இந்த 11 வீரர்கள் தான் செம்ம மாஸ்; முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிரடி கருத்து

நியூசிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், தான் ஆடியகாலத்தில், எதிரணிகளில் ஆடிய மிகச்சிறந்த வெள்ளைப்பந்து வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும் ஆல்ரவுண்டருமான ஸ்காட் ஸ்டைரிஸ், நியூசிலாந்து அணிக்காக 1999ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டுவரை 12 ஆண்டுகள் ஆடினார். 29 சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும் 188 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஸ்டைரிஸும் ஒருவர். இந்நிலையில், தான் ஆடிய காலத்தில் சிறந்த வீரர்கள் 11 பேரை தேர்வு செய்து பெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளார்.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜெயசூரியா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசை வீரராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும் வெற்றிகரமான மூன்றாம் வரிசை வீரருமான ரிக்கி பாண்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளார்.

நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக விராட் கோலியையும் ஐந்தாம் வரிசையில் டிவில்லியர்ஸையும் தேர்வு செய்த ஸ்டைரிஸ், விக்கெட் கீப்பராக ஒன் அண்ட் ஒன்லி தோனியை தேர்வு செய்திருக்கிறார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவானும், ஆல்டைம் கிரிக்கெட்டின் பெஸ்ட் வீரர்களில் ஒருவருமான ஜாக் காலிஸை தேர்வு செய்துள்ளார்.

WELLINGTON, NEW ZEALAND – DECEMBER 19: Former New Zealand cricketer and current Sky Sport presenter Scott Styris looks on during a rain delay on day five of the First Test match in the series between New Zealand and Sri Lanka at Basin Reserve on December 19, 2018 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

ஸ்பின் பவுலர்களாக ஜாம்பவான்கள் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்ன் ஆகிய இருவரையும் தேர்வு செய்த ஸ்டைரிஸ், ஃபாஸ்ட் பவுலர்களாக க்ளென் மெக்ராத் மற்றும் மலிங்கா ஆகிய இருவரையும் தேர்வு செய்தார்.

ஸ்டைரிஸ் தேர்வு செய்த தன்னை எதிர்த்து ஆடியதில் சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள் அணி:

சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெயசூரியா, ரிக்கி பாண்டிங், விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஜாக் காலிஸ், தோனி(விக்கெட் கீப்பர்), ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், க்ளென் மெக்ராத், லசித் மலிங்கா.

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் ஆலன் டொனால்டு ஆகியோருக்கு எதிராக நான் அதிகமாக ஆடியதில்லை. அதனால் அவர்களை சேர்க்கவில்லை. அதேபோல அண்டர் 19 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக்கிற்கு எதிராக ஆடியுள்ளேன். அவரையும் சேர்க்கலாம் என்றால், வார்னேவிற்கு முன் அவரைத்தான் சேர்ப்பேன். ஆனால் நான் சீனியர் அணியில் தேர்வு செய்ததால் அவரை சேர்க்கவில்லை என்று ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.