தன்னைச் சந்திக்க பாட்டியாலாவிலிருந்து வந்த 93 வயது ரசிகர்: சேவாக் நெகிழ்ச்சி

தன்னைச் சந்திக்க பாட்டியாலாவிலிருந்து வந்த 93 வயது ரசிகர்: சேவாக் நெகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் கொண்டாடப்படும் அதிரடி வீரர் விரேந்திர சேவாக், இவர் இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, அயல்நாட்டு ரசிகர்கள் முதல் கிரிக்கெட் பண்டிதர்கள் வரை கிரிக்கெட் அடிப்படைகளை விட்டுக் கொடுக்காத தன் ஆட்டத்தின் மூலம் கவர்ந்திழுத்தவர்.

இளைஞர்கள் மட்டுமல்ல வயது முதிர்ந்தவர்கள் கூட சேவாக் ஆட்டத்துக்கு சிறந்த ரசிகர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருக்கும் சேவாகைப் பார்க்க 93 வயது முதிய ரசிகர் ஓம் பிரகாஷ் பாட்டியாலாவிலிருந்து வந்தது சேவாக் உள்ளிட்டோரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

தன் 93 வயது ரசிகருடன் கட்டித் தழுவி, ஆசீர்வாதம் பெற்று புகைப்படங்கள் எடுத்து சேவாக் ட்விட்டரில் கருத்து வெளியிடும்போது, “ஓம்பிரகாஷ்ஜியை திடீரென சந்தித்தபோது மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். 93 வயதில் பாட்டியாலாவிலிருந்து என்னைப் பார்க்க வந்து என் மீதான பிரியத்தை வெளிப்படுத்தினார்” என்று பதிவிட்டுள்ளார்.

சேவாகின் இந்தச் செய்கை ட்விட்டரில் அவரைப் பின் தொடர்பவர்களிடையே பலத்த வரவேற்பு பெற்றுள்ளது, தனிமைப்பட்டுப் போயிருக்கும் முதியோருக்கு இதெல்லாம் ஒரு பெரிய, அரிய மகிழ்ச்சித் தருணங்கள் குட் விரூபாய் என்று அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்

Editor:

This website uses cookies.