இங்கிலாந்து – இந்தியா அணிகள் மோத இருக்கும் டெஸ்ட் தொடருக்கான வீரர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் புவனேஸ்வர்குமார் அணியில் இடம்பெறவில்லை. இதுகுறித்து ஏன் என விளக்கமளித்துள்ளது தேர்வுக்குழு.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றது.
ஒருநாள் போட்டிக்கான தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியுற்று தரவரிசை பட்டியலிலும் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்தது.
அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆட இருக்கிறது இந்திய அணி. அதற்க்கான 18 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலையும் பிசிசிஐ நிர்வாகம் தற்போது வெளியிட்டது.
காயம் இன்னும் சரிவர குணமடையாததால் டெஸ்ட் தொடரிலும் இடம்பெற மாட்டார் என எதிர்பார்த்த நிலையில், முதல் மூன்று போட்டிக்கான டெஸ்ட் அணிகள் அறிவிக்கப்பட்ட பட்டியலில், பும்ரா இடம்பெற்றார்.
இதுகுறித்து கூறுகையில், முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பும்ரா ஆடமாட்டார். இரண்டாவது போட்டியில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் எனவும் அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான லிமிடெட் ஓவர் போட்டிகளில் இவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் முதுகு தசைப்பிடிப்பு காரணமாக ஆடவில்லை. மூன்றாவது போட்டியில் மீண்டும் அணியில் ஆடினார்.
தற்போது டெஸ்ட் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் 18 பேர் கொண்ட பட்டியலில் இவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஷ்ரதுல் தாகூர் க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் அணிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டதால் இறுதி இரண்டு போட்டிகளில் புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புவனேஷ்வரின் சோதனையைப் பற்றி பிசியோ பெர்ஹார்ட் மற்றும் ட்ரைனர் பாசு ஆகியோர் முறையான அறிவிப்பை அளித்திருந்தார்களா என்பது குறித்து கேள்விகள் எழுகின்றன. ஏனெனில், 3வது போட்டியில் இவரை சேர்த்ததால் முதுகு தசைப்பிடிப்பு அதிகமாகியுள்ளதாக தெரிகிறது.
புவனேஸ்வர் அணியில் இடம்பெறாதது இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் பல கேள்விகள் எழுகின்றன.
இது குறித்து தேர்வுக்குழு கூறுகையில், அவரின் தசைப்பிடிப்பு தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
ஏன் இப்படி முழுமையாக குணமடையாமல் அவரை அட வைத்தார்கள் என்ற கேள்விக்கு, அதை நீங்கள் ரவி சாஸ்த்திரியிடம் தான் கேட்க வேண்டும் என பதில் அளித்தது தேர்வுக்குழு.
2014ம் ஆண்டு இங்கிலாந்து மைதானத்தில் சிறப்பாக செயல்பட்ட புவனேஸ்வர் குமார் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். அதில் இவரது சராசரி 21.77 ஆகும்.
இதுவரை 21 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள புவனேஸ்வர் குமார் 63 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் மற்றும் 552 அடித்துள்ளார்.
அவரின் தசைப்பிடிப்பின் காரணமாக தான் அவர் அணியில் இடம் பெறவில்லை. 3 போட்டிகளுக்குள் குணமடைந்துவிட்டால் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கும் எனவும் தேர்வுக்குழு தெரிவித்தது. மேலும், அவருக்கு பதிலாக தாகூர் அணியில் இடம்பெறுவர் எனவும் தெரிவித்தது.
முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணி :
- முரளி விஜய்
- ஷிகர் தவான்
- சேட்டேஷ்வர் புஜரா
- விராட்கோலி (கேப்டன்)
- அஜிங்கியா ரகானே(துணைக்கேப்டன்)
- லோகேஷ் ராகுல்
- ஹர்திக் பாண்ட்யா
- குல்தீப் யாதவ்
- உமேஷ் யாதவ்
- இஷாந்த் சர்மா
- கருன் நாயர்,
- ரிஷப் பாண்ட்,(கீப்பர்)
- ரவி அஸ்வின்,
- ரவிந்தர ஜடேஜா,
- முகமது சமீ,
- ஜஸ்ப்பிரிட் பும்ரா ,
- ஸ்ரதுல் தாகூர்,
- தினேஷ் கார்த்திக்(கீப்பர்)