2011ல் தோனியை தட்டித்தூக்க திட்டம் போட்டனர்.. நான்தான் காப்பற்றி வைத்தேன்! முன்னாள் பிசிசிஐ தலைவர் என் ஸ்ரீனிவாசன் ஓப்பன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், கிங்காகவும் திகழ்ந்த தல தோனி, திடீரென நேற்று தனது ஓய்வை அறிவித்தார்.

தோனியின் இந்த திடீர் அறிவிப்பை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் தோனி தோனி என்றே பெயரே பேசப்பட்டு வருகிறது.

 

2011ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்று கொடுத்தவுடன் தோனியை கேப்டன் பதவியில் இருந்து தூக்கலாம் என்று தேர்வு குழு முடிவு செய்துள்ளது. இதற்காக பிசிசிஐ தலைவர் என்ற முழு பதவியின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி தோனியை காப்பாற்றியதாக முன்னாள் பிசிசிஐ தலைவர் என் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்…

இந்த விஷயம் 2011ம் ஆண்டு நடந்தது. இந்திய அணி உலக கோப்பை தொடரை வென்றது. அதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி நன்றாக விளையாடவில்லை. இதன் காரணமாக தேர்வு குழுவில் இருந்த ஒருவர் தோனியை ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

தோனியை எப்படி கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடியும்? சில மாதங்களுக்கு முன்னர் தான் உலக கோப்பை தொடரை வென்று இருக்கிறார் என்று கூறினேன். மேலும் தோனிகுப் பதிலாக யாரை கேட்னாக்குவது என்று கூட தேர்வுக்குழுவினர் யோசிக்கவில்லை. இது பற்றிய விவாதம் நடந்து கொண்டே இருந்தது. தேர்வுக் குழுவினரின் கூட்டம் நடைபெறும் தோனியை ஒரு அணி வீரராக மட்டும் அணியில் சேர்க்க முடியாது என்று நான் கூறினேன்.

அன்று விடுமுறை தினம் நான் கொஞ்சி விளையாடி கொண்டிருந்தேன். பிசிசிஐ செயலாளராக இருந்த சஞ்சய் என்னிடம் போன் செய்து கூறினார். தோனி கேப்டனாக தேர்வு செய்ய தேர்வுக் குழுவினர் ஒத்துவராது. அணியில் ஒரு வீரராக மட்டும் தான் தேர்வு செய்வார்கலாம் என்று கூறினார். அதன் பின்னர் தோனி கேப்டன் தான் என்று நான் முடிவு செய்தேன் என்னுடைய முழு அதிகாரங்களையும் அதற்காக பயன்படுத்தினேன் என்று கூறியுள்ளார் என் சீனிவாசன்.

Mohamed:

This website uses cookies.