உலககோப்பையில் கோல்மால் செய்த மூத்த இந்திய வீரர்!! கடும் நடவடிக்கை எடுக்க பிசிசிஐ திட்டம்!!

இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 15 நாட்கள் தங்கிக்கொள்ள கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது. ஆனால் அதையும் மீறி மூத்த வீரர் ஒருவர் உலக கோப்பை போட்டி நடந்த 7 வார காலமும் தனது மனைவியை தன்னுடன் தங்க வைத்திருந்த விஷயம் இப்போது கசிந்துள்ளது.

மனைவி தன்னுடன் கூடுதல் நாட்கள் தங்குவதற்கு அவர் கேப்டன் அல்லது பயிற்சியாளர் யாருடைய அனுமதியையும் பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் குறிப்பிட்ட இந்த விதிமுறையை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்ரமணியத்திடம் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது.

இந்த மூத்த வீரர் யார் என்று தற்போது வரை தெரியவில்லை. இந்திய அணியில் மூத்த வீரர்கள் ஆக இருப்பவர்கள் மகேந்திரசிங் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் என்று கூறலாம். அதற்கு அடுத்து தவிர பெரிதாக பெயர் சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை. இப்படிப் பார்த்தால் இந்த மூவரில் யாரேனும் ஒருவர்தான் இந்த விதியை மீறி செயல்பட்டு இருக்க வேண்டும்.

தோனியின் பக்கம் சென்று பார்த்தால் டோனியின் மனைவி மற்றும் மகள் உலக கோப்பையின் முதல் ஒரு சில தொடர்களில் போட்டிகளில் இருந்ததை நாம் பார்த்திருப்போம். அரையிறுதிப் போட்டியை அதற்கு முன்னர் நடந்த லீக் போட்டியின் இறுதி கட்டத்திலேயோ அவரது மகள் அல்லது மனைவி மைதானத்துக்கு வந்ததை பார்க்கவில்லை.

ரோஹித் சர்மாவை எடுத்துக்கொண்டால் அவர் ஐந்து சதம் அடிக்கும் போது அவரது மனைவி அவருடன் இருந்ததை நாம் பார்த்தோம். கடைசியாக நான்காவது சதம் அடிக்கும் போது இருந்தார். இவரும் லீக் போட்டிகள் முடிவடைந்த உடன் தங்களது மனைவியை இந்தியாவிற்கு அனுப்பி விட்டார் என்று தெரியவந்துள்ளது.

இறுதியில் விராட் கோலியின் மீது இந்த சந்தேகம் திரும்பியுள்ளது. கிட்டத்தட்ட இறுதிப்போட்டிவரை அனுஷ்கா ஷர்மா விராட் கோலியுடன் இருந்ததாக அரசல் புரசலாக செய்திகள் வந்துள்ளது . இதன் காரணமாக இந்த விதியை மீறிய அந்த வீரர் விராட் கோலி ஆக இருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.

Sathish Kumar:

This website uses cookies.