டெல்லி வன்முறையைப் பற்றி இறுதியாக வாய் திறந்த கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்திற்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டெல்லி வன்முறைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என்று அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சேவாக் ஆகியோரும் டெல்லி வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சேவாக் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ டெல்லியில் நடக்கும் சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன். எந்த ஒரு காயமும், துன்பமும் யாருக்கேனும் ஏற்பட்டால் அது இந்த நாட்டின் தலைநகர் மீது விழும் கறையாக இருக்கும். அனைவரும் அமைதியை பேண வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

 

 

யுவராஜ்சிங் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “டெல்லியில் நடைபெறும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். சூழலை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் மனிதர்கள், எனவே, பரஸ்பரம் நாம் அன்பும் மரியாதையும் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.
சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைமை காவலர் மற்றும் உளவு பிரிவு அதிகாரி உள்பட பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.  இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் ஆஸ்பத்திரிகளில் மரணமடைந்துள்ளனர். இதனால் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து இருந்தது.  இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 4 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.