பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் எதிர்கொண்ட 2 திறமையான மற்றும் கடினமான பேட்ஸ்மேன்கள் குறித்து பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி.
நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி தழுவியது.
முதல் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர், ஆனால் எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலிய அணியுடன் பரிதாபமாக தோல்வியை தழுவி உலக கோப்பையை வெல்லும் கனவை தவற விட்டது.
குறிப்பாக இந்த உலகக் கோப்பை தொடரில் மிக சிறந்த முறையில் பந்துவீசி பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்த பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் பாகிஸ்தான் அணிக்காக லிமிடெட் ஓவர் போட்டிகளில் ரெகுலராக களமிறங்க கூடிய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் அதிரடியாக செயல்படக் கூடிய திறமை படைத்த இவர் பல முறை பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளுக்கு உதவியாக இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சதாப் கான், சதாபிடம் கேள்வி கேளுங்கள் என்று #askshadab பின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் எந்த பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது என்று சதாபிடம் கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த சதாப் இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஆகிய இருவரின் பெயரையும் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.