டி.20 உலகக்கோப்பையில் இந்த இந்திய வீரரின் விக்கெட்டை எடுத்தது தான் வேற லெவன்; ஷாகின் அப்ரிடி சொல்கிறார் !!

இந்த இந்திய வீரரின் விக்கெட்டை வீழ்த்தியதது தான் என்னுடைய ஃபேவரைட், மனம் திறந்த சகீன் அப்ரிடி.

உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி

2021 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று அனைவரும் பேசி வந்த நிலையில் முதல் போட்டியிலேயே இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணி மிகப் பெரிய அடி கொடுத்தது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சகீன் அப்ரிடி என்று கூறலாம், அந்த அளவிற்கு இவருடைய  பந்து வீச்சு மிகவும் அபராமக இருந்தது, இவருடைய  பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியே திணறியது.

குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மென்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய மூவரின் விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணிக்கு தோல்வியை உறுதி செய்தார்.

இந்த தோல்வியை இந்திய ரசிகர்களால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சகீன் அப்ரிடி,இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையில் ஒவ்வொரு முறையும் விக்கெட் வீழ்த்திய பின் அந்த வீரர் விக்கெட் இழந்தார் என்பதை நடித்து காண்பித்தார்.இது இந்திய கிரிக்கெட் ரசிகர் மத்தியில் மிகவும் வெறுப்பை ஏற்படுத்தியது.

இதனால் நொந்து போன இந்திய ரசிகர்கள், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தலுவியதால் மீம்ஸ் செய்து பாகிஸ்தான் அணியை வச்சு செய்தார்கள்,குறிப்பாக அந்த போட்டியில் மோசமாக பந்து வீசிய சகீன் அப்ரிடி நெட்டிசன் கையில் சிக்கி சின்னாபின்னமானார்.

இந்திய வீரரின் விக்கெட் குறித்து பேசிய சகீன் அப்ரிடி

இந்த நிலையில் அவ்வப்போது இந்திய அணி குறித்து பேசும் சகீன் அப்ரிடி, தான் வீழ்த்திய இந்திய வீரர்களின் விக்கெட்டிலே  தனக்கு விருப்பமான விக்கெட்டாக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேஎல் ராகுலின் விக்கெட் தான் என்று பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நான் வீழ்த்திய விக்கெட்களில் கே எல் ராகுல் விக்கெட் தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, ஏனென்றால் அந்த பந்தை அவரால் கொஞ்சம் கூட கணிக்க முடியவில்லை,அப்பொழுது கே எல் ராகுல் நான் வீசிய பந்து, அந்த அளவிற்கு வரும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று பேசினார்.

இந்திய அணிக்கு எதிரான அந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களின் விக்கெட்டை வீழ்த்திய சகீன் அப்ரிடி மேன் ஆப் தி மேட்ச் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.