ரிக்கி பாண்டிங்கை விட இவர் தான் சிறந்த கேப்டன்; அடித்து சொல்லும் அப்ரிடி !!
முன்னாள் கேப்டன்களான ரிக்கி பாண்டிங், தோனி ஆகிய இருவரில் யார் சிறந்த கேப்டன் என்ற விவாதம் குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி ஓபனாக தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங்கும் கேப்டனாகவும் ஒரு பிளேயராகவும் பல அபார வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர்.
இன்று வரை தலைசிறந்த கேப்டன்களில் முதன்மையான வீரர்களாக இருக்கும் ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவரில் யார் சிறந்த கேப்டன் என்ற விவாதமும் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது. இருவரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் தொடர்ந்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இது குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி, இந்த விவாதம் குறித்தான தனது கருத்தை ஓபனாக தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளமான ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என கேள்வி கேட்டார், இதற்கு பதிலளித்த ஷாஹித் அப்ரிடி, நான் பாண்டிங்கை விட தோனி தான் சிறந்த கேப்டன் என்பேன். ஏனெனில், முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைத்து சாதித்து காட்டினார் தோனி என்று அஃப்ரிடி தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி, ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த சிறப்புக்குரியவர். இதுதவிர, ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஷ்வின், ஜடேஜா, பும்ரா, புவனேஷ்வர் குமார் உட்பட பல சிறந்த வீரர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களை வளர்த்துவிட்டுள்ளார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.