பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை கூறும் அப்ரிடி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – வங்காள தேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற இயலும் என்ற நிலையில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் வங்காள தேசம் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. பாகிஸ்தான் அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.
வங்காள தேசம் அணியிடம் தோல்வியடைந்து பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி ‘டுவிட்டர்’ மூலம் அறிவுரை வழங்கியுள்ளார்.
அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வங்காள தேச அணிக்கு வாழ்த்துக்கள். அனைத்து துறையிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு ஏமாற்றம் அளித்தது. மைதானத்தில் ஆக்ரோசமான ஆட்டம் அனைத்து துறைகளிலும் மிஸ். கடந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணி மீது அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. திரும்பவும் நல்ல நிலைக்கு திரும்பி பயிற்சி ஆட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்’’ என பதிவிட்டுள்ளார்.