கண்டு கொள்ளாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி… ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக தமிழக வீரர் ஷாருக் கானை ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் !!

கண்டு கொள்ளாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி… ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக தமிழக வீரர் ஷாருக் கானை ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்

தமிழகத்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான ஷாருக் கானை குஜராத் டைட்டன்ஸ் அணி 7.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில், அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த ஷாருக் கானும் ஒருவராக இருந்தார்.

உள்ளூர் தொடர்களில் தமிழக அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கொடுத்ததன் மூலம், கிரிக்கெட் உலகின் கவனத்தை பெற்று இதன் மூலம் கடந்த 2022ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் ஷாருக் கான் இடம்பெற்றார்.

கடந்த தொடர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஷாருக் கான், பேட்டிங்கில் பெரிதாக பங்களிக்கவில்லை என்பதால் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை தனது அணியில் இருந்து விடுவித்தது.

இதன் மூலம் ஐபிஎல் தொடரின் ஏலத்தின் எதிர்கொண்ட ஷாருக் கான் 40 லட்சம் ரூபாயை தனது அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்தார். இவரை மீண்டும் தனது அணியிலேயே எடுத்து கொள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி சற்று ஆர்வம் காட்டிவிட்டு அதன்பின் பின்வாங்கி கொண்டது. இதன் மூலம் ஷாருக் கானை, குஜராத் டைட்டன்ஸ் அணி 7.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

குஜராத் அணியின் கேப்டனும், அந்த அணியின் பினிசருமான ஹர்திக் பாண்டியா, குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றுவிட்டதால், ஹர்திக் பாண்டியாவின் இடத்தில் விளையாடக்கூடிய அதிரடி வீரர் ஒருவரின் தேவையே குஜராத் அணிக்கு இருந்தது. தற்போது ஷாருக் கானை எடுத்துள்ளதன் மூலம், குஜராத் அணியின் இந்த தேவையும் நிறைவடைந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

 

Mohamed:

This website uses cookies.