உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு !!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு

அடுத்த மாத இறுதியில் துவங்க உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

கிரிக்கெட் உலகின் வல்லரசை (சாம்பியன்) தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாத இறுதியில் துவங்க உள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் அணிகளின் கனவான உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணியும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தங்களது அணியை அறிவித்து வருகின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியை பி.சி.சி.ஐ., நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

மாசார்ஃபே மோர்டசா தலைமையிலான வங்கதேச அணியில் வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசனே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல் தமிம் இக்பால், மஹ்மதுல்லாஹ், முஸ்தபிசுர் ரஹீம், சவுமியா சர்கார், லிண்டான் டாஸ்,  முகமது மிதுன், ரூபன் ஹூசைன்,  முஸ்தபிசுர் ரஹ்மான், முகமது சைஃபுதீன், அபு ஜைத போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணி;

மஹ்ரஃபே மோர்டசா (கேப்டன்), தமிம் இக்பால், மஹ்மதுல்லாஹ், முஸ்தபிசுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன் (துணை கேப்டன்), சவுமியா சர்கார், லிடான் தாஸ், சபீர் ரஹ்மான், மெஹ்தி ஹசன், முகமது மிதுன், ரூபல் ஹூசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், முகமது சைஃபுதீன், மோஸ்தெக் ஹூசைன், அபு ஜைத்.

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி;

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், கே.எல் ராகுல், தினேஷ் கார்த்திக்.

Mohamed:

This website uses cookies.