நம்பர் 1 வீரருக்கே இந்த நிலைமையா..? ஷாகிப் அல் ஹசனை கண்டுகொள்ளாத அணிகள்.. விலை போகவில்லை !!

நம்பர் 1 வீரருக்கே இந்த நிலைமையா..? ஷாகிப் அல் ஹசனை கண்டுகொள்ளாத அணிகள்.. விலை போகவில்லை

1.5 ஆரம்பப் விலையாக நிர்ணயித்த உலகின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் விலை போகவில்லை.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் கோலாகாலமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 405 வீரர்கள் இடம்பெற்றிருக்கும் இந்த ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்து வருகிறது.

இதில்,ஆல்ரவுண்டர்களுக்கான ஏலத்தில் சாம்கரன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் கேமரூன் கிரீன் உள்ளிட்ட வீரர்கள் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் உலகின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டரான வங்கதேச ஆணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனை ஒரு அணிகூட ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பை வெல்வதற்கு உறுதுணையாக இருந்த வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகிப் அல்ஹசன் கடந்த 2022 ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார.

இந்தநிலையில் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 1.5 ரூபாய் தன்னுடைய ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்திருந்த சகிப் அல்ஹசன் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருடைய பெயர் அறிவிக்கப்பட்டவுடன் எந்த அணியும் இவரை வாங்குவதற்கு முன் வரவில்லை.

ஆனால் அனைத்து வீரர்களும் ஏலம் விடப்பட்ட பிறகு விற்காத வீரர்கள் மீண்டும் ஏலம் விடப்படும் போது நட்சத்திர ஆள்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் நிச்சயம் விலைபோவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.