இலங்கைக்கெதிரான தொடருக்கான அணி அறிவிப்பு! கேப்டனும் அறிவிப்பு! ஆல் ரவுண்டருக்கு ரெஸ்ட்!

இலங்கை தொடருக்கான வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசனுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மோர்தசா கேப்டனாக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்க சுற்றோடு வங்காள தேச அணி வெளியேறியது. இத்தொடருக்குப் பின் வங்காள தேச அணி முதல் சுற்றுப் பயணமாக இலங்கை சென்று விளையாடுகிறது.

வங்காள தேச ஒருநாள் கிரிக்கெட் அணி இந்த மாதம் கடைசியில் இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 26, 28 மற்றும் ஜூலை 31-ந்தேதி போட்டிகள் நடக்கிறது.

TAUNTON, ENGLAND – JUNE 17: Shakib Al Hasan of Bangladesh bats during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between West Indies and Bangladesh at The County Ground 

இதற்கான வங்காள தேச அணி இன்று அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் அபாரமாக விளையாடிய ஷாகிப் அல் ஹசனுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன லித்தோன் தாஸ் தனிப்பட்ட காரணத்திற்காக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

லீக் சுற்றோடு அந்த அணி வெளியேறினாலும், கேப்டன் பதவியில் இருந்து மோர்தசா நீக்கப்படவில்லை. இலங்கை தொடருக்கான வங்காள தேச அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடருக்கான வங்களா தேச அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மோர்தசா, 2. தமிம் இக்பால், 3. சவுமியா சர்கர், 4 சவுமியா சர்கர், 5. அனாமுல் ஹக்யூ, 6. முகமது மிதுன், 7. முஷ்பிகுர் ரஹிம், 8. மெஹ்முதுல்லா ரியாத், 9. மொசாடெக் ஹொசைன், 10. சபீர் ரஹ்மான், 11. மெஹிதி ஹசன், 12. தைஜூல் இஸ்லாம், 13. ருபெல் ஹொசைன், 14. முகமது ஷாய்புதின், 15. முஸ்டாபிஜூர் ரஹ்மான்.

Bangladesh’s captain Mashrafe Mortaza reacts during the 2019 Cricket World Cup group stage match between Australia and Bangladesh at Trent Bridge in Nottingham, central England, 

எட்டு போட்டிகளில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய மஷ்ரஃப், அணியின் மந்தமான செயல்திறனை மாற்ற மீண்டும் கேப்டனாக பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். பிசிபி அவர் மீது நம்பிக்கை வைத்து இந்த பறுப்பிய மீண்டும் அவரிடம் ஒப்படைத்துள்ளது.

258 பேர் கொல்லப்பட்ட கொடிய ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் அணியாக பங்களாதேஷ் இருக்கும்.

இந்த அணிகள் ஜூலை 26, 28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கொழும்பில் உள்ள பிரேமதாச சர்வதேச மைதானத்தில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.