2017ம் ஆண்டு ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து இரு அணிகளுக்கும் ஐசிசி நிர்வாகம் டெஸ்ட் அணி அந்தஸ்து வழங்கியது. இவ்விரு அணிகளும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 11வது 12வது அணியாகும்.
இதைத்தொடர்ந்து, வருகின்ற ஜூன் 14ம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையில் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்களாதேஷ் அணி கேப்டன் சாகிப் அல் ஹாசன் கூறியதாவது, “ஆப்கானிஸ்தான் அணி இந்த நிலையில் இருப்பது மிக்க மகிழ்ச்சி.. கடந்த இரண்டு வருடங்களாக அவர்களது வெளிப்பாடுகளை கவனித்து வருகிறேன். மிகுந்த ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. அந்த அணியில் திறமை மிக்கவர்கள் வீரர்கள் உள்ளனர். அவர்கள் உட்சங்களை தோடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கு அவர்கள் மிகவும் தகுதியானவர்களே”.
பங்களாதேஷ் அணி 2000ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்த்து பெற்றதிலிருந்து அந்த அணிக்காக ஆடி வரும் சாகிப் அல் ஹாசன், அதில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறார். பங்களாதேஷ் அணி 106 டெஸ்ட் போட்டிகளில் 10 வெற்றி 80 தோல்வி 16 டிரா என எல்லாவித தடங்கல்களையும் தாண்டியே வந்திருக்கிறது. வெற்றியில் கிடைக்கும் சந்தோசத்தைவிட தோல்விகள் நிறைய கற்றுத்தரும்எனவும் அவர் அறிவுறுத்தினார்.
அணியின் வெற்றிக்காக அனைத்து வீரர்களும் தங்களது முழுதிறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறுகையில்,” எங்கள் தற்போதைய பலமாக நாங்கள் கருதுவது சுழற்பந்துவீச்சாளர்களே, பேட்ஸ்மேன் வரிசையில் சற்று மாற்றம் தேவை படுகிறது.. அதை பெறவிருக்கும் அனுபவங்களினால் சரி செய்வோம்” இவ்வாறு கூறினார்.
ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் அஸ்கர் ஸ்டானிஸ்கை, “பங்களாதேஷ் சிறப்பான அணி அவர்களிடம் பெரும் வெற்றி, இந்தியாவிடம் போட்டியிடுகயில் பெரும் உத்வேகத்தை தரும். டெஹ்ராடூன் மைதானம் அதை சுற்றியுள்ள மலைகள் எங்கள் நாட்டின் அமைப்பை நினைவுகூறுகின்றன” என குறிப்பிட்டார்.