அடிக்க இல்ல… உங்களால இவர் பந்துவீச்ச தடுக்க முடியாது; ஆஸ்திரேலிய வீரர்களை எச்சரித்த முன்னாள் வீரர்
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் முகமது ஷமியின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஜேசன் கில்லஸ்பி தெரிவித்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுள்ளன.
டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி ஜூன் 7ம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த டெஸ்ட் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி ஜூன் 7ம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த டெஸ்ட் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தநிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி குறித்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஜேசன் கில்லஸ்பி, முகமது ஷமியின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜேசன் கில்லஸ்பி, “முகமது ஷமியின் பந்துவீச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. பந்துவீசுவதற்காக அவர் ஓடி வருவதே எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பயம் கொடுக்கும் வகையில் இருக்கும். இந்திய அணிக்காக அவர் பந்துவீச்சில் மிக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப பந்துவீசுவதில் அவர் மிக சிறந்து விளங்குகிறார். என்னை பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் முகமது ஷமியின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றே கருதுகிறேன். இறுதி போட்டி நடைபெற இருக்கும் ஆடுகளம் முகமது ஷமியின் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு முகமது ஷமி கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார் என்றே கருதுகிறேன். ஆஸ்திரேலிய வீரர்கள் தடுப்பாட்டம் ஆட நினைத்தாலும் அதுவும் அவர்களுக்கு சவாலானதாகவே இருக்கும்” என்று தெரிவித்தார்.